Last Updated:

நடப்பு நிதியாண்டின் ஜிடிபி குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட வளர்ச்சி விகிதத்தை விட குறைவாக வெளியிட்ட மத்திய அரசு.

உதாரணமாக கிராஸ் டொமெஸ்ட்டிக் ப்ராடக்ட் என்று குறிப்பிடப்படும் GDP ஒரு நகரத்தின் செல்வ வளத்தை மதிப்பிடும் அளவீடாக பயன்படுத்தப்படுகிறது. எளிமையாக சொல்வதென்றால் ஒரு குறிபிட்ட பகுதியின் GDP என்பது  அந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை என வரையறுக்கப்படுகிறது.

2024-25ம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரியும் என மத்திய அரசு கணித்துள்ளது. கடந்த நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 8.2 சதவீதம் வரை இருக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் 6.6 சதவீத வளர்ச்சி இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு அதை விட குறைவான வளர்ச்சியே இருக்கும் என தெரிவித்துள்ளது.

2024ம் ஆண்டு முடிந்த நிதியாண்டில் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகள் 1.4 சதவீதம் வளர்ச்சியடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2024-2025ம் நிதியாண்டில் 3.8 சதவீதம் வரை வளர்ச்சி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில்தான் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

நடப்பு நிதியாண்டு ஜிடிபி வளர்ச்சி: மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் வெளியிட்ட முரண்பட்ட தகவல்கள்



Source link