Last Updated:
நிலுவையில் உள்ள ஆயிரத்து 56 கோடி ரூபாய் ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்கும்படி ஊரக வளர்ச்சி அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
100 நாள் வேலைத் திட்ட ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் மனு அளித்தார்.
தமிழ்நாட்டில் சுமார் 91 லட்சம் பேர் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதுவரை நிலுவையில் உள்ள ஆயிரத்து 56 கோடி ரூபாய் ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்கும்படி ஊரக வளர்ச்சி அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது, 100 நாள் வேலைத் திட்ட ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி மனு அளித்தனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அதுகுறித்தும் இந்த சந்திப்பின் போது ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
Delhi,Delhi,Delhi
January 27, 2025 2:48 PM IST
Union Budget 2025 | 100 நாள் வேலை திட்டத்திற்கான நிலுவை தொகை விவகாரம் : மத்திய நிதியமைச்சரிடம் தங்கம் தென்னரசு மனு