இன்றைய காலக்கட்டத்தில் துணி துவைக்கும் வாஷிங் மெஷினை பார்த்திருக்கிறோம். இருந்தாலும்.. மனிதர்களை துவைத்து உலர்த்தும் மெஷினை பற்றி கேள்விப்பட்டிருக்கீறீர்களா? எதிர்காலத்தில் மனிதர்களை துவைத்து உலர்த்தும் ஹியூமன் வாஷிங் மெஷின்கள் வரவிருக்கின்றன. நாள் முழுவதும் பலவிதமான வேலைகளை செய்து மிகவும் சோர்வாக இருப்பவர்கள், குளிக்க சோம்பேறித்தனம் பட்டால், ஒரு 15 நிமிடம் மெஷின் டப்பில் உட்கார்ந்தால் போதும். நம்மை குளிக்க வைத்து ட்ரை செய்து வெளியே அனுப்பும். இந்து மெஷினை தொழில்நுட்பத் துறையில் உலகின் மிகவும் முன்னேறிய நாடாகக் கருதப்படும் ஜப்பான் உருவாக்கியுள்ளது. அதாவது ஒரு நபரின் உடலை 15 முதல் 20 நிமிடங்களுக்குள் சுத்தம் செய்து கொடுக்கும் ஹியூமன் வாஷிங் மெஷின் ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மிராய் நிங்கன் சென்டகுகி:

ஜப்பானிய பொறியாளர்கள் இந்த புதிய ஹியூமன் வாஷிங் மெஷினை உருவாக்கியுள்ளனர். இந்த மெஷினுக்கு மிராய் நீங்கன் சென்டகுகி (Mirai Ningen Sentakuki) என்று பெயரிட்டார். இந்த AI மெஷின் ஆனது 15 நிமிடங்களில் மனிதர்களை குளித்து உலர்த்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த மெஷினை ஒசாகாவைச் சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் உருவாக்கியுள்ளது. இந்த வாஷிங் மெஷின் ஆனது ஒரு நபரை வெறும் 15 நிமிடங்களில் முழுமையாக சுத்தம் செய்யும் திறன் கொண்டது என்று நிறுவனம் கூறுகிறது.

விளம்பரம்

விரைவில் இந்த மெஷின் ஆனது ஒசாகா கன்சாய் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும். எக்ஸ்போவில் இந்த மெஷினை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானிய பொறியியலாளர்கள் மக்களின் எதிர்கால தேவைகளை மனதில் கொண்டு இதை உருவாக்கியுள்ளனர். இந்த மெஷின் பார்ப்பதற்கு பாட் அல்லது காக்பிட் போன்று காட்சியளிக்கிறது. மேலும், இதில் சுத்தம் செய்யும் செயல்முறையின் போது பிரைவசி மற்றும் ஆறுதல் உணர்வை அளிக்கிறது.

ஊற வைத்த திராட்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!


ஊற வைத்த திராட்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!

AI ஹியூமன் வாஷிங் மெஷின் எவ்வாறு வேலை செய்கிறது?

இந்த வாஷிங் மெஷின் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.. முதலில் ஒரு நபர் மெஷினில் உள்ள பிளாஸ்டிக் பேடில் உட்கார வேண்டும், அதன் பிறகு இந்த டப் ஆனது பாதி வெந்நீரால் நிரப்பப்படும். இதற்குப் பிறகு, நீரின் ஜெட்களிலிருந்து டைனி ஏர் பப்பில்கள் உருவாகத் தொடங்கும். அதன் பிறகு, இந்த பப்பில்கள் தோலில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யும். அதே நேரத்தில், இந்த மெஷினில் உள்ள AI ஆனது நபரின் உடல் மற்றும் தோல் வகையின் அடிப்படையில் வாஷ் மற்றும் ட்ரை விருப்பங்களை தீர்மானிக்கிறது. இந்த மெஷின் ஆனது மனித தோலில் உள்ள அழுக்குகளை அகற்றுவது மட்டுமின்றி மக்களின் மனதையும் ரிலாக்ஸ் செய்யும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

இந்த தொழில்நுட்பம் அதிநவீனமாகத் தோன்றலாம்.. ஆனால் இது பழமையானது. இந்த மெஷின் ஆனது 1970 ஆம் ஆண்டு ஜப்பான் உலக கண்காட்சியில் காட்டப்பட்டது. அந்த நேரத்தில் சான்யோ எலக்ட்ரிக் நிறுவனம் (இப்போது பானாசோனிக்) ஓவல் வடிவ “அல்ட்ராசோனிக் குளியல்” ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த மெஷினில் ஒருவர் உட்காரும் போது தானாகவே வெந்நீர் நிரப்பப்பட்டது. இதில், அல்ட்ராசோனிக் வேவ் மற்றும் மசாஜ் பால்கள் உடலை சுத்தம் செய்யும், பின்னர் நீர் தானாகவே வெளியேறும், ஆனால் அந்த நேரத்தில் அல்ட்ராசோனிக் குளியல் பிரபலமடையவில்லை. ஆனால் தற்போது இந்த புதிய இயந்திரத்தை ஜப்பானைச் சேர்ந்த ‘சயின்ஸ் கோ’ நிறுவனத்தின் பொறியாளர்கள் தயாரித்துள்ளனர்.

விளம்பரம்

பழைய வேர்ஷன்-ஐ விட புதிய வேர்ஷனில் அதிக மசாஜ் பால்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். மிராய் நீங்கன் சென்டகுகி ஆனது அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஒசாகாவில் நடக்கும் எக்ஸ்போ 2025 இல் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒசாகா கன்சாய் எக்ஸ்போவில் 1,000 பேர் சோதனை பயன்பாட்டிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சிக்குப் பிறகு, சந்தை விற்பனைக்கு மெஷின் தயாரிக்கப்படும் என்று ‘சயின்ஸ் கோ’ நிறுவனத்தின் தலைவர் அயோமா தெரிவித்தார்.

.



Source link