Last Updated:
BCCI | பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருக்கும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி பயிற்சியாளர்களுக்கான பணி ஒப்பந்தம் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை மட்டுமே போடப்படும்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிசிசிஐ சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயின் வருடாந்திர கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்காக வெளிநாடு செல்லும்போது அவர்களது குடும்பத்தினர் அதிகபட்சம் 14 நாட்கள் மட்டுமே வீரர்களுடன் தங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த பார்டர்-கவாஸ்கர் தொடரில் விராட் கோலியின் மனைவி மற்றும் கே.எல். ராகுலின் மனைவி தொடர் முழுக்க அவர்களுடன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேபோல, வீரர்கள் பயணம் மேற்கொள்ளும்போது அணிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் மட்டும்தான் பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் விராட் கோலி தனி வாகனத்தில் பயணம் செய்தது சர்ச்சையாகி இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது மட்டுமல்லாமல் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருக்கும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி பயிற்சியாளர்களுக்கான பணி ஒப்பந்தம் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை மட்டுமே போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 14, 2025 3:41 PM IST