Last Updated:

இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றுள்ளனர். மேலும் சத்யராஜ், காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, பிரதீக் பாப்பர், வத்சன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் சிக்கந்தர் படத்தில் நடித்துள்ளனர்.

News18

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக சிக்கந்தர் படத்தின் டீசர் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக தனது 92 ஆவது வயதில் நேற்று காலமானார். நேற்றிரவு 8 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று வெளியாகவிருந்த சிக்கந்தர் படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் சல்மான் கான் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைத்திருக்கிறார்.

இதையும் படிங்க – Sawadeeka… அனிருத்தின் ‘செலிபிரேஷன்’.. ‘விடாமுயற்சி’ பட முதல் பாடல் வெளியானது!

இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றுள்ளனர். மேலும் சத்யராஜ், காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, பிரதீக் பாப்பர், வத்சன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் சிக்கந்தர் படத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளிவந்த தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான் நடித்திருந்தது வரவேற்பை பெற்றது. இவர் அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.





Source link