இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ புயல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது.

கனமழையுடன் வீசிய இந்த புயலால் பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

The post மயோட்டா தீவை புரட்டிய புயல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Daily Ceylon.



Source link