Last Updated:

இடது கை பேட்ஸ்மேனான காம்ப்ளி இந்திய அணிக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

News18

உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் ஜெர்சியுடன் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

51 வயதாகும் காம்ப்ளிக்கு கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை அக்ருதி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் காம்ப்ளி நடனமாடிய காட்சிகள் சமீபத்தில் வைரலாகின.

இந்நிலையில் அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அப்போது அவர் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து உற்சாகத்துடன் காணப்பட்டார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காம்ப்ளி தான் இப்போது பூரண குணம் அடைந்திருப்பதாகவும், மது அருந்துவதை தவிர்க்குமாறும் கூறியதுடன் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதையும் படிங்க – “சலித்து விட்டேன், இனி அணியில் இருந்து வெளியேற்றம் தான்“ டிரெஸிங் ரூமில் கம்பீர் காட்டம்.

மேலும் அவர் கூறியதாவது- மருத்துவர்கள் எனது உடலை ஃபிட்டாக மாற்றி விட்டனர். அதனால்தான் நான் வீடு திரும்புகிறேன். வினோத் காம்ப்ளி ஒருபோதும்  கிரிக்கெட்டை விட்டு திரும்ப மாட்டார் என்பதை சிவாஜி மைதானத்தில் பொதுமக்களுக்கு காண்பிப்பேன். மருத்துவமனையிலும் நான் பேட்டிங் பயிற்சி எடுத்து, சிக்சரும் பவுண்டரியுமாக அடித்தேன் என்று உற்சாகத்துடன் கூறினார்.

இடது கை பேட்ஸ்மேனான காம்ப்ளி இந்திய அணிக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.





Source link