கிரெடிட் கார்டுகள் உங்கள் அன்றாட செலவுகளை சேமிப்பதற்கான சிறந்த வழியாகும். இருப்பினும், திட்டமிடப்படாத செலவுகள் மற்றும் அதீத கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கிரெடிட் கார்டுகள் தினசரி செலவுகளில், குறிப்பாக மளிகைப் பொருட்களுக்கு குறிப்பிட்ட கேஷ்பேக் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. கடனைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள், செலவினங்களை புத்திசாலித்தனமாக நிர்வகிக்க வேண்டும் மற்றும் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன் அவர்களின் நிதி நிலையை மதிப்பிட வேண்டும்.

விளம்பரம்

கிரெடிட் கார்டுகள் தினசரி பரிவர்த்தனைகள் மற்றும் குறிப்பிட்ட பிராண்டுகளில் தள்ளுபடிகள், ரிவார்ட்ஸ் மற்றும் கேஷ்பேக்குகளை வழங்குகின்றன. இதன்மூலம் நீங்கள் சிறந்த சலுகையுடன் பணத்தைச் சேமிக்கலாம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் மளிகை சாமான்கள் ஒரு முக்கிய செலவாகும். இதற்காகவே ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டி இருக்கிறது. எனவே, மளிகைப் பொருட்களுக்காகவே பிரத்யேகமாக கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பணத்தைச் சேமிக்கலாம் மற்றும் சிறந்த தள்ளுபடிகள், வெகுமதிகள் மற்றும் கேஷ்பேக்குகளைப் பெறலாம்.

விளம்பரம்

மளிகை ஷாப்பிங்கிற்கான சிறந்த கிரெடிட் கார்டுகள்

1. அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு

சேர்க்கை கட்டணம்: கட்டணம் இல்லை

முக்கிய அம்சங்கள்:

  • நீங்கள் பிரைம் உறுப்பினராக இருந்தால் அமேசானில் 5% கேஷ்பேக் கிடைக்கும்.

  • நீங்கள் பிரைம் உறுப்பினர் அல்லாதவராக இருந்தால் அமேசானில் 3% கேஷ்பேக்கைப் பெற முடியும்.

  • அமேசான் பே பார்ட்னர் மூலம் செய்யப்படும் பேமெண்ட்டுக்கு 2% கேஷ்பேக் கிடைக்கும்.

  • மற்ற செலவுகளுக்கு 1% கேஷ்பேக் வழங்கப்படும்.

  • இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பம்புகளிலும் எரிபொருள் கூடுதல் கட்டணத்தில் 1% தள்ளுபடி கிடைக்கும்.

2. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஸ்மார்ட் இயர்ன் கிரெடிட் கார்டு

சேர கட்டணம்: ரூ. 495

முக்கிய அம்சங்கள்:

  • செலவழிக்கும் ஒவ்வொரு ரூ.50க்கும் 1 மெம்பர்ஷிப் ரிவார்டு பாய்ண்ட்டைப் பெறுவீர்கள்.

  • ஆண்டு செலவு ரூ.1,20,000, ரூ.1,80,000 & ரூ.2,40,000 கடக்கும்போது முறையே ரூ.500 வவுச்சரைப் பெறுவீர்கள்.

  • எச்பிசிஎல் (HPCL) பெட்ரோல் பம்புகளில் ரூ.5,000 வரையிலான எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு வசதிக் கட்டணங்கள் தள்ளுபடி பெறலாம்.

  • சொமேட்டோ, பிளிப்கார்ட், மிந்த்ரா மற்றும் பலவற்றில் 10X மெம்பர்ஷிப் ரிவார்டு பாய்ண்டுகளைப் பெறுங்கள்.

  • அமேசானில் பொருட்கள் வாங்கும்போது 5X மெம்பர்ஷிப் ரிவார்டு பாய்ண்டுகள் கிடைக்கும்.

3. பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு

சேர கட்டணம்: ரூ.500

முக்கிய அம்சங்கள்:

  • மற்ற பரிவர்த்தனைகளில் 1% பணத்தை திரும்பப் பெறுங்கள்.

  • ஒரு வருடத்தில் ரூ.50,000க்கு மேல் செலவு செய்பவர்கள், ஆண்டுதோறும் உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளுக்கான 4 இலவச அணுகலைப் பெறலாம்.

  • கார்டை பெறும் வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் மற்றும் ஸ்விகியிலிருந்து ரூ.600 மதிப்புள்ள தொடக்க வெகுமதிகள் கிடைக்கும்.

  • ரூ.400 முதல் ரூ.4,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு எரிபொருள் கூடுதல் கட்டணத்தில் இருந்து 1% தள்ளுபடியைப் பெறுங்கள்.

  • பிளிப்கார்ட் மற்றும் கிளியர்டிரிப்பில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும்.

  • ஸ்விகி, பிவிஆர், உபர் போன்ற பார்ட்னர் வணிகர் சேவைகளுக்கு 4% கேஷ்பேக்கைப் பெறுங்கள்

4. ஆக்சிஸ் பேங்க் ரிவார்ட்ஸ் கிரெடிட் கார்டு

சேர கட்டணம்: ரூ.1,000

முக்கிய அம்சங்கள்:

  • டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் ஆடைக் கடைகளில் செய்யப்படும் செலவுகளுக்கு 10X ரிவார்டு புள்ளிகளைப் பெறுங்கள்.

  • 200 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் மாதம் இருமுறை ஸ்விக்கியில் 30% வரை தள்ளுபடி பெறுங்கள்.

  • ஒரு காலாண்டில் 2 இலவச உள்நாட்டு விமான நிலைய ஓய்வறை வசதியைப் பெறுங்கள்.

  • ஒவ்வொரு 125 ரூபாய்க்கும் 2 எட்ஜ் ரிவார்டு புள்ளிகளைப் பெறுங்கள்.

  • ஒவ்வொரு ஸ்டேட்மெண்ட்டிலும் ரூ.30,000 செலவு தாண்டும்போதும் 1,500 எட்ஜ் ரிவார்டு புள்ளிகளைப் பெறுங்கள்.

இதையும் படிக்க:
7 கோடி பி.எஃப். சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ்… இந்த மாற்றத்தை கொண்டு வரப்போகிறது மத்திய அரசு?

5. ஸ்விகி எச்டிஎஃப்சி பேங்க் கிரெடிட் கார்டு

சேர கட்டணம்: ரூ.500

முக்கிய அம்சங்கள்:

  • ஸ்விகி, இன்ஸ்டாமார்ட், டைன்அவுட் மற்றும் ஜீனியில் எஃப்என் சிங்னெட் (FN Signet) உணவு ஆர்டர் செய்யும்போதும் 10% வரை கேஷ்பேக் கிடைக்கும்.

  • ஆன்லைன் செலவுகளுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும்.

  • மற்ற செலவுகளுக்கு 1% கேஷ்பேக் கிடைக்கும்.

  • ஒரு மாதத்தில் ரூ.3,500 வரை கேஷ்பேக் கிடைக்கும்.

  • கார்டை செயல்படுத்தியவுடன் ரூ.1,199 மதிப்புள்ள 3 மாத ஸ்விகி ஒன் மெம்பர்ஷிப்பைப் பெறுங்கள்.

  • பில்லிங்கில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழிக்கும் பட்சத்தில், புதுப்பித்தல் கட்டண தள்ளுபடியைப் பெறலாம்.

6. ஆக்சிஸ் பேங்க் செலக்ட் கிரெடிட் கார்டு

சேர கட்டணம்: ரூ.3,000

முக்கிய அம்சங்கள்:

  • அனைத்து சில்லறை பரிவர்த்தனைகளிலும் 2X எட்ஜ் ரிவார்ட் புள்ளிகளைப் பெறுங்கள்.

  • வரவேற்பு பலனாக ரூ.2,000 மதிப்புள்ள 10,000 எட்ஜ் ரிவார்டு புள்ளிகளைப் பெறலாம்.

  • ஒவ்வொரு 200 ரூபாய்க்கும் 10 எட்ஜ் ரிவார்டு புள்ளிகளைப் பெறுங்கள்.

  • பிக்பேஸ்கட்டில் ரூ.3,000 மற்றும் அதற்கு மேல் செலவழித்தால், மாதத்திற்கு ரூ.500 தள்ளுபடியைப் பெறுங்கள்.

  • ஸ்விகியில் ரூ.1,000 குறைந்தபட்ச ஆர்டரில், மாதத்திற்கு இரண்டு முறை ரூ.200 தள்ளுபடியைப் பெற முடியும்.

  • ஆண்டுதோறும் 12 இலவச சர்வதேச விமான நிலைய ஓய்வறை அணுகல்களையும், ஒவ்வொரு காலாண்டிற்கும் இரண்டு உள்நாட்டிலும் மற்றும் ஆண்டுதோறும் 12 இலவச கோல்ஃப் சுற்றுகளையும் அனுபவிக்கலாம்.

இதையும் படிக்க:
கிரெடிட் ஸ்கோர் கம்மியா இருந்தாலும் பரவாயில்லை… இந்த ஐடியா ஃபாலோ பண்ணி பர்சனல் லோன் வாங்கலாம்…!

7. எஸ்பிஐ கார்டு பிரைம்

சேர கட்டணம்: ரூ.2,999

முக்கிய அம்சங்கள்:

  • பிறந்தநாள் செலவில் 10X ரிவார்டு புள்ளிகளைப் பெறுங்கள்; ஒவ்வொரு ரூ.100 சில்லறைச் செலவுகளுக்கும் இரண்டு ரிவார்டு புள்ளிகள் கிடைக்கும்.

  • இலவச கிளப் விஸ்டாரா சில்வர் மெம்பர்ஷிப்பைப் பெறுங்கள்.

  • யாத்ரா, பாண்டலூன்ஸ் மற்றும் பல பிராண்டுகளில் ரூ.3,000 மதிப்புள்ள வரவேற்பு பலன்களின் வவுச்சர்களை பெறலாம்.

  • காலாண்டுக்கு ரூ.50,000க்கு மேல் செலவு செய்தால், ரூ.1,000 மதிப்புள்ள பீட்சா ஹட் கிஃப்ட் வவுச்சர் கிடைக்கும்.

  • ஒரு வருடத்தில் 5 லட்சம் வரை செலவழிக்கும் நபர்களுக்கு, ரூ.7,000 மதிப்புள்ள யாத்ரா / பாண்டலூன்ஸ் கிஃப்ட் வவுச்சர் கிடைக்கும்.

  • உணவகங்கள், சூப்பர் மார்கெட், டிபார்மெண்டல் ஸ்டோர்கள் மற்றும் திரைப்பட டிக்கெட்டுகளை வாங்கும்போது, ஒவ்வொரு முறையும் 5X ரிவார்டு புள்ளிகளைப் பெறுங்கள்.

  • ஆண்டுதோறும் 8 சர்வதேச மற்றும் 4 உள்நாட்டு விமான நிலைய காத்திருப்பு ஓய்வறை அணுகல்களை இலவசமாக அனுபவிக்கலாம்.

கிரெடிட் கார்டுகள் உங்கள் அன்றாடச் செலவுகளைச் சேமிப்பதற்கான சிறந்த வழியாகும். இருப்பினும், திட்டமிடப்படாத செலவுகள் மற்றும் அதீத கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு ஆகியவை உங்களுக்கு தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது இறுதியில் உங்களை கடனாளியாக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

கிறிஸ்துமஸ் குடிலில் இடம்பெறும் பொம்மைகள்… பின்னணி என்ன தெரியுமா.?


கிறிஸ்துமஸ் குடிலில் இடம்பெறும் பொம்மைகள்… பின்னணி என்ன தெரியுமா.?

எனவே, நீங்கள் கிரெடிட் கார்டைப் பெறுவதற்கு முன், உங்கள் தேவைகளையும், கார்டை உங்களால் சமாளிக்க முடியுமா, இல்லையா என்பதையும் ஆய்வு செய்யுங்கள். இதன் மூலம், நீங்கள் கிரெடிட் கார்டு குறித்த சரியான முடிவுகளை எடுக்க முடியும்.

விளம்பரம்

.



Source link