கான்பூர் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில்  மழை விளையாடியதால், வீரர்கள் களம் இறங்கவில்லை.

இந்தியா, வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கான்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

விளம்பரம்

இதையும் படிங்க – மும்பை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்!.. இப்போ அதே அணியின் முக்கிய வீரர்.. யார் அவர் தெரியுமா?

இந்நிலையில், கான்பூரில் சனிக்கிழமையும் மழை பெய்ததால், இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பிற்பகல் வரை மழை நீடித்ததால் இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

.



Source link