பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான உயர்ந்தபட்சம் 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக்கூடிய வகையில் வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக நேற்று(20) நடைபெற்ற அமைச்சரவையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவையினால் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 1-5 வரையான வகுப்புக்களில் மாணவர்கள் தொகை 100 இற்கும் குறைவான அனைத்து அரச பாடசாலைகளிலுள்ள மாணவர்களுக்கும், விசேட கல்விப் பிரிவு அல்லது விசேட கல்விப் பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பிரிவெனாக்களிலுள்ள மாணவர்கள் உள்ளடங்கலாக 1.4 மில்லியன் மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியிலுள்ள 100 கல்வி வலயங்களில் 8,956 பாடசாலைகளில் ‘பாடசாலை உணவு வேலைத்திட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post மாணவர்களுக்கான போஷாக்கு உணவு திட்டம் – 2025ல் நடைமுறைக்கு appeared first on Daily Ceylon.



Source link