Last Updated:
OTT: விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் வெளியான இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 10 கோடி. ஆனால், உலகம் முழுவதும் இப்படம் 40 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
ஓடிடி-யில் இந்த வீக் எண்ட் என்ன படம் பார்க்கிறதுன்னு தெரியாம குழம்பி போயிருக்கீங்களா? செம்ம திரில்லர் படம் பார்க்கணுமா? அதே சமயம் படத்தில் உச்சகட்ட சஸ்பென்ஸும் இருக்கணுமா? அப்போ நீங்க மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படம் இதுதான்.
ஜெயராம், மம்மூட்டி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ (Abraham Ozler) படம் தான் அது. தொடர் கொலைகள், உச்சகட்ட சஸ்பென்ஸ், அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட், எதிர்பார்த்திடாத திருப்பம் என படம் தொடக்கம் முதல் முடிவு வரை நம்மை அலெர்ட் மோடில் வைத்திருக்கும். இந்த படத்தில் நகரில் நடக்கும் கொலைகள் ஒன்றன் பின் ஒன்றாக காட்டப்படுகிறது. இதன் மூலம் ஹீரோவான ஏசிபி ஆபிரகாம் ஓஸ்லர் வழக்கைத் தீர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். இருப்பினும், வழக்கைத் தீர்ப்பது ஆபிரகாம் ஓஸ்லருக்கு சவாலான விஷயமாக அமைகிறது.
ஓஸ்லர் வழக்கை விசாரிக்கும்போது ஒரு புதிய கனெக்ஷன் கிடைக்கிறது. ஆனால் இறுதியில் அது ஒரு அதிர்ச்சியான உண்மையை சொல்கிறது. ஒரு சீரியல் கில்லர் ஏன் மக்களை குறிவைப்பது ஏன் என்ற அதிர்ச்சியான சம்பவத்தை பார்த்தால் அசந்து போவீர்கள். படம் பார்க்கும் வரை கொலையாளி யார் என்று யூகிக்க முடியாது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
‘ஆபிரகாம் ஓஸ்லர்’ படம் சற்றும் சலிப்பை ஏற்படுத்தாமல், மிரட்டலான சஸ்பென்ஸ் காட்சிகளுடன் காண்போரை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடும். இப்படத்தை மலையாள திரில்லர் ஸ்பெஷலிஸ்ட் மிதுன் மானுவல் தாமஸ் இயக்க, ரந்தீர் கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் வெளியான இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 10 கோடி. ஆனால், உலகம் முழுவதும் இப்படம் 40 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
சில நாட்களுக்கு முன்பு ஜெயராம் மற்றும் மம்மூட்டி நடித்த க்ரைம் த்ரில்லர் படமான ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ ஓடிடி-யில் வெளியாகி அங்கும் ஹிட் அடித்தது. வீக் எண்ட் என்ன படம் பார்க்கிறதுன்னு தெரியாம இருந்தா, இந்த வீக் எண்ட் உங்களுக்கான சஸ்பென்ஸ் நிறைந்த சூப்பர் திரில்லர் படம் இதுதான். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ் ஸ்டாரில் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 30, 2024 4:22 PM IST