Last Updated:
‘பாட்டல் ராதா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசியதில் எந்த தவறும் இல்லை என இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
‘பாட்டல் ராதா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசியதில் எந்த தவறும் இல்லை என இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ‘பாட்டல் ராதா’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், மது பழக்கம் குறித்தும் அதன் சாதக, பாதகங்கள் குறித்தும் பேசினார். அப்போது தகாத வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தினார்.
இதற்கு பல்வேறு தரப்பினரிடம் கண்டனம் எழுந்தது. பொதுமேடையில் இப்படியான வார்த்தை பிரயோகங்கள் தவறு என பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து ‘பேட் கேர்ள்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மிஷ்கின் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: OTT Spot | ’புஷ்பா 2’ முதல் ‘ஐடென்டிட்டி’ வரை – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?
இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற ‘திரு.மாணிக்கம்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சமுத்திரக்கனியிடம் மிஷ்கினின் பேச்சு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சமுத்திரக்கனி, “மிஷ்கின் மன்னிப்புக் கேட்டு விட்டார். அதற்கான காரணத்தையும் அவர் சொல்லிவிட்டார். அவர் என்னை பார்த்தாலும் கூட, கெட்டவார்த்தை சொல்லி அழைத்து, முதுகில் அடித்து பேசுவார்.
அவர் வேறொரு எக்ஸ்ட்ரீம். அன்பில் உச்சத்தில் அவர் சில விஷயங்களை வெளிப்படுத்துகிறார். அதை நான் அப்படித்தான் பார்க்கிறேன். மிஷ்கினை நான் தவறாக பார்க்கவில்லை. அன்பின் வெளிப்பாடு அது.
மிஷ்கின் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவரைப்பற்றி புரிந்தவர்களுக்குத் தெரியும் அவர் யார் என்று. புரியாதவர்களுக்கு தான் அந்த மன்னிப்பு. அவருக்காக நானும் கூட மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
January 30, 2025 1:12 PM IST