டெக்னோ நிறுவனம் இந்தியாவில் புதிதாக Pop 9 என்ற பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்து உள்ளது. “Live Limitless” என்ற அதன் டேக்லைனுக்கு ஏற்றவாறு இந்த ஃபோன் பொழுதுபோக்கு, மல்டிடாஸ்கிங் மற்றும் துடிப்பான டிசைனை விரும்பும் இளம் யூஸர்களுக்கு ஏற்றதாக உள்ளது.

யூஸர்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீமிங் செய்தாலும், சோஷியல் மீடியாக்களை ஸ்க்ரோலிங் செய்தாலும் அல்லது ஃபோட்டோ & வீடியோ எடுத்தாலும், புதிய POP 9 தடையற்ற மற்றும் ஸ்டைலான அனுபவத்தை யூஸர்களுக்கு வழங்கும் என நிறுவனம் உறுதியளிக்கிறது.

விளம்பரம்

இந்தியாவில் Tecno Pop 9 4G மொபைலின் விலை:

இந்தியாவில் Tecno Pop 9 4G மொபைலின் 3GB + 64GB வேரியன்ட் விலை ரூ.6,699-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் ரூ.200 வங்கிச் சலுகையுடன்,இந்த மொபைலை ரூ. 6,499-க்கு அமேசான் வழியாக வரும் நவம்பர் 26ஆம் தேதி மதியம் 12 மணி முதல் வாங்கலாம். இந்த மொபைல் கிளிட்டரி ஒயிட், லைம் கிரீன் மற்றும் ஸ்டார்ட்ரெயில் பிளாக் உள்ளிட்ட 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

விளம்பரம்

டெக்னோ பாப் 9 மொபைலின் ஸ்பெஸிஃபிகேஷன்கள்:

புதிய Pop 9 4G மொபைலானது 6.67-இன்ச் HD+ (720 x 1,600 பிக்சல்ஸ்) ஸ்கிரீனுடன் 90Hz ரெஃப்ரஷ் ரேட்,180Hz டச் சேம்பிளிங் ரேட், 480nits பீக் பிரைட்னஸ் லெவல், 263ppi பிக்சல் டென்சிட்டியை கொண்டிருக்கிறது. இந்த மொபைல் 12nm MediaTek Helio G50 சிப்செட்டுடன் வருகிறது. இது 3GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HiOS 14-ல் இயங்குகிறது.

விளம்பரம்

கேமராவைப் பொறுத்தவரை புதிய Tecno Pop 9 4G மொபைலானது 4x டிஜிட்டல் ஜூம் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டுடன் கூடிய 13-MP பிரைமரி ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது. முன்பக்கம் 8-MP சென்சார் உள்ளது, இது 1080p குவாலிட்டி வீடியோ ரெக்கார்டிங்கை சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிக்க:
ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5 ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகள்…

இந்த மொபைல் DTS-சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் யூனிட், IR ரிமோட் கண்ட்ரோலுக்கான சப்போர்ட், தூசி மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளது.15W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. அதேபோல் டெக்னோ நிறுவனம் மூன்று வருட பின்னடைவு இல்லாத செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது, இது நீண்ட கால பயன்பாட்டிற்கு நம்பகமான தேர்வாக அமைகிறது. டெக்னோ பாப் 9 4ஜி மொபைலின் மொத்த எடை 188.5 கிராம் ஆகும்.

விளம்பரம்

.



Source link