வாழைச்சேனை காகித தொழிற்சாலையின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
செயலிழந்த இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்ட பின்னர் காகித தொழிற்சாலையின் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் 1956 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் என்பதால் பழுதுபார்க்கும் வேலைத்திட்டத்திற்காக சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டது.
குறித்த தொழிற்சாலையில் இயந்திரங்களை புதுப்பித்தால், ஒரு நாளைக்கு 5 டன் உற்பத்தி செய்வதன் மூலம் மாதத்திற்கு 22 மில்லியன் ரூபாய் இலாபம் பெற முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.