நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிந்தது. மேலும், மீண்டும் சவரனுக்கு ரூ.57,000 கீழ் குறைந்தது. இன்றும் விலை குறைவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.

நேற்று (நவம்பர் 26-ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.120 குறைந்து, ரூ.7,080-க்கும், ஒரு சவரன் ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

விளம்பரம்

ஆனால், இன்று (நவம்பர் 27-ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.25 அதிகரித்து, ரூ.7,105-க்கும், ஒரு சவரன் ரூ.200 அதிகரித்து ரூ.56,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,870-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.46,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read | நடித்தது ஒரே ஒரு தமிழ் படம்.. பல கோடிக்கு சொத்து, சொந்தமாக ஜெட் வைத்திருக்கும் நடிகை!

விளம்பரம்

அதேநேரம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து ஆறு நாட்களுக்கும் மேலாக உயர்ந்துவந்த தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

.



Source link