Last Updated:

Actor Rajinikanth | லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்

கூலி படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பேங்காக் செல்வதற்கு விமான நிலையம் வந்த நடிகர் ரஜினியை கண்டவுடன் ரசிகர்கள் “தலைவா தலைவா” என்று ஆரவார கோஷமிட்டனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூலி படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பேங்காக்கில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.

சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் செய்தியாளர்கள் கூலி திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு “70% படப்பிடிப்பு முடிந்துவிட்டது” என்றும் “வரும் 13-ஆம் தேதியில் இருந்து 28ஆம் தேதி வரை பேங்காக்கில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.

அதை தொடர்ந்து தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வியை செய்தியாளர் கேட்ட உடன் “அரசியல் தொடர்பான எந்த கேள்வியும் என்னிடம் கேட்க வேண்டாம் என ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்” என்று ஆவேசமாக தெரிவித்தார். இதையடுத்து விமான நிலையத்திற்கு உள்ளே ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் “தலைவா தலைவா” என்று கோஷமிட்டனர். உடனடியாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ரசிகரை பார்த்து போதும் என்று கூறினார்.

இதனை அடுத்து விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல முற்பட்டபோது சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.





Source link