தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்நிலையில் அவருடைய 45-வது படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் கங்குவா படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது. நெகடிவ் விமர்சனங்களால் இந்த படத்தின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. 2000 கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் கூறி இருந்தாலும் படம் ரசிகர்களை கவராத காரணத்தால் நஷ்டம் அடைந்தது. சூர்யா அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவருடைய 44-வது படத்தை முடித்துவிட்ட நிலையில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவருடைய 45-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘சூர்யா 45’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விளம்பரம்

சூர்யாவின் 45-வது படத்திற்கு சமீபத்தில் தனது ‘ஆசை கூட’, ‘கட்சி சேர’ பாடல்களின் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் ‘சூர்யா 45’ படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக படக்குழு ஏற்கனவே போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தனர்.

விளம்பரம்
விளம்பரம்

தொடர்ந்து படத்தின் தொழில்நுட்ப குழு குறித்த தகவலை போஸ்டர் மூலமாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, சண்டை பயிற்சி இயக்குநராக விக்ரம் மோ, கலை இயக்குநராக அருண் வெஞ்சரமூடு மற்றும் படத்தொகுப்பை ஆர்.கலைவாணன் ஆகியோர் மேற்கொள்ள உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விளம்பரம்

.





Source link