சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, முன்னர் 40 ரூபா தொடக்கம் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபா தொடக்கம் 30 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.

பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மொத்த வியாபாரிகள் முட்டை மற்றும் கோழி இறைச்சியை சேகரித்து வைத்திருந்தாலும், சரியான தேவை இல்லாததால், சில பொருட்களின் விலை அடுத்த சில நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக சில வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.



Source link