Last Updated:

Allu Arjun: கூட்ட நெரிசல் விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும் அல்லு அர்ஜுனுக்கும் நேரடி மோதல் உண்டாகியுள்ள சமயத்தில், அல்லு அர்ஜுனுக்கு போலீசார் சம்மன் அளித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

புஷ்பா-2 திரைப்படம் வெளியிடப்பட்ட நாளில், கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு காவல் துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

புஷ்பா-2 திரைப்படம் வெளியான நாளில், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்குக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்த சிக்கடப்பள்ளி காவல் நிலைய காவலர்கள், அல்லு அர்ஜுனை கைது செய்தனர். நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், பிணையில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், விசாரணைக்காக காவல் நிலையத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆஜராக சிக்கடப்பள்ளி காவலர்கள் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கூட்ட நெரிசல் விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும் அல்லு அர்ஜுனுக்கும் நேரடி மோதல் உண்டாகியுள்ள சமயத்தில், அல்லு அர்ஜுனுக்கு போலீசார் சம்மன் அளித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

இதனிடையே, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாயை திரைப்பட தயாரிப்பாளர் வழங்கியுள்ளார். குடும்பத்தினருக்கு 20 கோடி ரூபாயை அல்லு அர்ஜுன் வழங்க வேண்டும் என்று திரைத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்த நிலையில், 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை குடும்பத்தினரிடம் தயாரிப்பாளர் வழங்கினார்.



Source link