Last Updated:

நைஜீரியாவில் தனது முன்னாள் காதலனுக்கு காதலி ஒருவர் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News18

யாராவது ஏதாவது சொன்னால் அல்லது ஏதுனும் தீங்கு விளைவித்தால் கோபமடைந்து, உடனே பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். அதற்கான வாய்ப்பு கிடைத்தவுடனேயே பழிவாங்கவும் நினைக்கிறார்கள். பெரும்பாலும் இந்த விஷயங்கள் காதலில் அதிகம் காணப்படுகின்றன. ஒரு நபருக்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால், என்ன செய்கிறோம் என்பதையே புரிந்து கொள்ள முடியாது அளவுக்கு கண்களை மறைத்துவிடுகின்றன.

ஆனால் அதன் விளைவுகளை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேரிடும் என்பதை பலரும் புரிந்து கொள்வதே இல்லை. அப்படி ஒரு சம்பவம்தான் இன்று மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டெய்லி ஸ்டார் என்ற ஆங்கில இணையதளத்தில் வெளியான செய்தியில், இந்த சம்பவமானது நைஜீரியாவில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. நைஜீரியாவில் எடோவில் உள்ள ஒரு வீட்டின் அறையில் 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் பிண்ணனி தெரிய வந்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஐந்து பேரின் மரணத்திற்கு ஒரே ஒரு பெண் மட்டுமே காரணம் என்று கூறப்படுகிறது. அறிக்கையின்படி, அந்த பெண் ஐந்து பேரையும் கொல்ல விரும்பவில்லை. தனது முன்னாள் காதலனை மட்டுமே கொல்ல விரும்பினார். ஆனால் மீதமுள்ள நான்கு பேரும் தவறுதலாக இறந்தனர். டெய்லி போஸ்ட் செய்தியின்படி, ​​இறந்தவர்களில் இருவர் சகோதரர்கள் என்றும், மீதமுள்ள மூன்று பேர் அவர்களது நண்பர்கள் என்றும் தெரியவந்தது.

அந்த வீட்டில் வசிக்கும் ஒரு ஆணை, பெண் ஒருவர் காதலித்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு  முன்பு அந்த பெண்ணுக்கு அவருடைய காதலனுக்கும் பிரேக்அப் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் மிகவும் கோபமடைந்து தனது காதலனை பழிவாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்தார்.

அதற்காக தனது முன்னாள் காதலனின் மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கோ இதில் விஷம் கலந்திருப்பது தெரியாமல், அவர் அந்த சூப்பை தனது சகோதரரிடமும், மற்ற நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டார். இதையடுத்து அந்த சூப்பை குடித்த காதலன் உட்பட மற்ற 4 பேரும் உயிரிழந்தனர். தற்போதைக்கு நைஜீரிய ராணுவம் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படியுங்கள் : தீபாவளி பரிசாக அம்மாவுக்கு ஐபோன் 15 வாங்கி கொடுத்த மகன்: மனதை நெகிழ வைக்கும் வீடியோ

விசாரணையின் போது அந்த பெண்ணே இந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து எடோ ஸ்டேட் போலீஸ் கமாண்ட் பிரஸ் அதிகாரி மோசஸ் யாமு கூறுகையில், எதனால் உயிரிழப்பு ஏற்பட்டது என்பது எங்களுக்கு தெரியும் என்றாலும், கொலைக்கான உறுதியான காரணம் குறித்து இன்னும் விசாரித்து வருவதாக கூறியுள்ளார். தற்போது சூப்பில் கலக்கப்பட்ட விஷம் அல்லது ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகை இரண்டில் ஒன்று இவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

தமிழ் செய்திகள்/உலகம்/

முன்னாள் காதலனை பழிவாங்க சூப்பில் விஷம் கலந்து கொடுத்த பெண்.! 5 பேர் உயிரிழந்த பரிதாபம்



Source link