Last Updated:
சமீபத்தில் கடலை மையமாகக் கொண்டு வெளியான தேவரா திரைப்படம் வெற்றி பெற்றிருந்த நிலையில் அதே போன்ற தோற்றத்தில் கிங்ஸ்டன் படத்துடைய டீசர் அமைந்துள்ளது.
ஜி.வி பிரகாஷ் குமார் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள கிங்ஸ்டன் படத்துடைய டீசர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக புகழ்பெற்று, நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் அவரது படங்கள் பெரும்பாலும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
அதே நேரத்தில் அவர் இசையமைக்கும் மற்ற படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின்றன. இதற்கு உதாரணமாக அமரன், தங்கலான் உள்ளிட்ட படங்களை கூறலாம். இவ்வாறு நடிப்பு மற்றும் இசை என இரண்டு துறையிலும் மிகவும் பிசியாக உள்ளார் ஜிவி பிரகாஷ் குமார்.
Also Read: Game Changer Twitter Review: எப்படி இருக்கிறது கேம் சேஞ்சர் திரைப்படம்..? கம்பேக் கொடுத்தாரா சங்கர்?
இந்நிலையில் அவரது நடிப்பில் கிங்ஸ்டன் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்துடைய டீசர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். திவ்யபாரதி, இளங்கோ குமரவேல் உள்ளிட்டோர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
Super happy to launch the teaser of #Kingston starring my friend @gvprakash. Looks like an extraordinary effort to bring us a sea fantasy adventure 👏 Good luck to the team. https://t.co/D7owgXo6OA
— Dhanush (@dhanushkraja) January 9, 2025
சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது. கடல் சார்ந்த படமாக கிங்ஸ்டன் படத்தை படக்குழுவினர் எடுத்துள்ளனர். இந்தியாவின் கடல் சார்ந்த பேண்டஸி அட்வென்ச்சர் படம் என கிங்ஸ்டன் படத்தை விளம்பரம் செய்துள்ளார்கள். டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த படம் மார்ச் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கடலை மையமாகக் கொண்டு வெளியான தேவரா திரைப்படம் வெற்றி பெற்றிருந்த நிலையில் அதே போன்ற தோற்றத்தில் கிங்ஸ்டன் படத்துடைய டீசர் அமைந்துள்ளது.
January 09, 2025 8:19 PM IST