ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் 2018 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏழை நடுத்தர மக்கள், உயர் நடுநிலை மக்கள், பணக்காரர்கள் என எந்த பாகுபாடுமின்றி 70 வயதை பூர்த்தி செய்த எவரும் ஆதார் அட்டையை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
இதற்கு பொருளாதார அளவுகோல் எதுவும் கிடையாது. இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் அறுவை சிகிச்சை போன்ற பெரிய அளவிலான மருத்துவ சிகிச்சைகளை செய்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டையை எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.
இந்த காப்பீட்டு திட்டத்தை விண்ணப்பிக்க https://beneficiary.nha.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது ஆயுஷ்மான் எனப்படும் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
செயலி மூலம் எப்படி விண்ணப்பிக்கலாம் என்னும் விளக்க வீடியோவை சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில்..
முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆயுஷ்மான் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் அதை ஓப்பன் செய்த உடனே நீங்கள் தகுதியுடையவரா என்பதை பரிசோதிக்க சில கேள்விகள் கேட்கப்படும்.
அதாவது நீங்கள் 70 வயதை பூர்த்தி செய்தவர்தானா என்பதை உறுதி செய்ய ஆதார் அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது. நீங்கள் 70 வயதை பூர்த்தி செய்யவில்லை எனில் தகுதியானவர் அல்ல என்பதை தெரிவிக்கிறது. நீங்கள் தகுதியானவர் என்பது உறுதி செய்தபின் சில விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
அதில், மத்திய அரசின் சுகாதர திட்டங்களான,
– மத்திய ஆயுத போலீஸ் படையினருக்கான ஆயுஷ்மான் சி.ஏ.பி.எப்
– முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பங்களிப்பு சுகாதார திட்டம்
போன்ற சில சுகாதார திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் பயன்பெற்று வருகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்படும். ஏனெனில் இந்த திட்டங்கள் எதிலும் நீங்கள் பயன்பெறவில்லை என்றால் மட்டுமே இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்.
பின், ஆதார் எண், குடுப்ப அட்டை எண், ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்த பின் தானாக சுய விவரங்களை பூர்த்தி செய்துக்கொள்கிறது.
பின் செல்ஃபோன் மூலம் உங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின் தொடர்பு முகவரி, செல்ஃபோன் எண், குடும்ப உறுப்பினர்களில் 70 வயதுடையவர்கள் அல்லது அதற்கு மேல் உள்ளவரகளின் விவரங்கள் ஆகிவற்றையும் பதிவிட வேண்டும். இவை அனைத்தையும் சரியாக பதிவு செய்து முடித்தபின் மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
.