Last Updated:

சீனியர் சிட்டிசன்களுக்கான முதலீட்டு ஆப்ஷன்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் அரசு மற்றும் தனியார் வங்கிகள் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

News18

சீனியர் சிட்டிசன்களுக்கான முதலீட்டு ஆப்ஷன்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் அரசு மற்றும் தனியார் வங்கிகள் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

ஓய்வு காலத்திற்குப் பிறகு நம்முடைய வழக்கமான வருமானம் முடிவுக்கு வந்துவிடும். இதனால் முன்கூட்டியே நம்முடைய பொருளாதாரத்தை திட்டமிட்டு கொள்வது மிகவும் அவசியம்.

இது குறிப்பாக உங்களுடைய சேமிப்புகளின் அடிப்படையில் அமையும். குறைந்த ரிஸ்க் அதே நேரத்தில் உறுதி அளிக்கப்பட்ட ரிட்டன்களை தரக்கூடிய முதலீடுகளில் சீனியர் சிட்டிசன்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

Also Read: ஜனவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் லிஸ்ட் இதோ… உங்கள் வேலைகளை சரிபார்த்துக்கோங்க…

இந்த இரண்டு விஷயங்களை கருத்தில் கொள்ளும் பொழுது, இந்தியாவில் உள்ள பலரது ஞாபகத்திற்கு முதலில் வருவது ஃபிக்சட் டெபாசிட். இது உங்களுடைய முதலீடுகள் மூலமாக பணம் சம்பாதிப்பதற்கான மிகவும் எளிமையான மற்றும் உறுதியளிக்கப்பட்ட வழியாகும். இது ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு பிறகு உங்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ரிட்டன்களை வழங்குகிறது.

எனவே 5 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு இந்தியாவின் அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

வங்கிகளின் பெயர் மற்றும் ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம்:

  • ஆக்சிஸ் வங்கி- 7.75
  • DCB வங்கி – 7.90
  • ஃபெடரல் வங்கி – 7.75
  • HDFC வங்கி – 7.50
  • ICICI வங்கி – 7.50
  • IndusInd வங்கி – 7.75
  • கரூர் வைசியா பேங்க் – 7.50
  • RBL வங்கி – 7.60
  • SBM வங்கி – 8.25
  • யெஸ் பேங்க் – 8.00
  • ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – 7.50

இதையும் படிக்க: ஓங்கி அடிக்கும் தங்கத்தின் விலை… ஒரு கிராம் இவ்வளவா ? அதிர்ச்சியில் பொதுமக்கள்

வங்கிகளின் பெயர் மற்றும் ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம்:

  • பேங்க் ஆஃப் பரோடா- 7.40
  • பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா – 7.00
  • கனரா வங்கி – 7.20
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 7.00
  • பஞ்சாப் நேஷனல் வங்கி – 7.00
  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 7.00
  • DBS வங்கி – 7.00
  • தனலட்சுமி வங்கி – 7.10
  • IDFC ஃபர்ஸ்ட் பேங்க் – 7.25
  • IDBI வங்கி – 7.00
  • கர்நாடகா வங்கி – 7.00
  • தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி – 7.00
  • J&K வங்கி – 7.00

விகிதங்கள் என்பது டிசம்பர் 2024-இல் அப்டேட் செய்யப்பட்டது. இந்த விகிதங்கள் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு பொருந்தும்.

சீனியர் சிட்டிசன் ஃபிக்சட் டெபாசிட்: தகுதி வரம்பு

இந்தியாவில் வசிக்கும் 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் பங்கு பெறலாம். அதே நேரத்தில் வெளிநாட்டு வாழ் சீனியர் சிட்டிசன்கள் NRE அல்லது NRO அக்கவுண்டுகள் மூலமாக இந்த திட்டங்களில் பங்கு பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள்.

தேவையான டாக்குமெண்ட்கள்

  • வயது நிரூபன சான்றிதழ்கள் (உதாரணமாக சீனியர் சிட்டிசன் ID கார்டு அல்லது மற்றவை)
  • ஆதார் அட்டை
  • பாஸ்போர்ட்
  • PAN கார்டு
  • புகைப்படம்
  • டெலிபோன் பில் அல்லது எலக்ட்ரிசிட்டி பில்
  • செக்குடன் பேங்க் ஸ்டேட்மென்ட்

எனவே ஓய்வு காலத்திற்கு பிறகான வாழ்க்கையை அழகாக அமைத்துக் கொள்வதற்கு சீனியர் சிட்டிசன்கள் இந்த மாதிரியான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து நிம்மதியான மற்றும் எந்தவித பொருளாதார சிக்கல்கள் இல்லாத அழகான வாழ்க்கையை வாழலாம்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கு அசத்தலான வட்டி விகிதங்களை வழங்கும் டாப் வங்கிகள்.. முழு லிஸ்ட் இதோ!



Source link