பொருளாதார திட்டமிடல் என்று வரும்போது ஓய்வுகால திட்டம் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஓய்வு காலத்திற்கு பிறகான வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு பணத்தை சேமிப்பது வழக்கம். இந்தியாவில் மிகவும் பிரபலமான மூன்று ஓய்வு கால சேமிப்புத் திட்டங்கள் உள்ளன.

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF), எம்பிளாயிஸ் பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) மற்றும் நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS). இந்த திட்டங்கள் அதன் அம்சங்கள், வரி பலன்கள் மற்றும் முதலீட்டு ஆப்ஷன்களில் இருந்து வேறுபடுகின்றன. இந்த மூன்று திட்டத்தையும் ஒப்பிட்டு உங்களுடைய ஓய்வு கால இலக்குகளோடு ஒத்துப் போகக்கூடிய எந்தத் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வீர்கள்.

விளம்பரம்

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF)

PPF என்பது அரசு ஆதரவு பெற்று வரும் நீண்ட கால சேமிப்புத் திட்டம். இது வரி பலன்களுடன் அற்புதமான ரிட்டன்களையும் வழங்குகிறது. இதில் முதலீடு செய்வதால் எந்தவொரு ரிஸ்க்கும் கிடையாது.

முக்கியமான அம்சங்கள்

  • இந்த திட்டத்திற்கான கால அளவு 15 வருடங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக 5 வருடங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.

  • தற்போதைய நிலையில் இந்தத் திட்டத்திற்கு ஓராண்டுக்கு 7.1% வட்டி கொடுக்கப்படுகிறது.

வரி பலன்கள்

வருமான வரிச் சட்டத்தில் உள்ள பிரிவு 80Cன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை டிடக்ஷன் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் பெரும் வட்டி பணம் மற்றும் மெச்சூரிட்டிக்கு வரி செலுத்த தேவையில்லை.

நன்மைகள்

  • உறுதி அளிக்கப்பட்ட ரிட்டன்

  • வட்டி மற்றும் மெச்சூரிட்டி தொகை ஆகிய இரண்டுக்கும் வரி கிடையாது.

  • குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாய் மற்றும் அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் என்ற உங்களுக்கு விருப்பமான முதலீடுகளை செய்யலாம்.

தீமைகள்

  • உங்களுடைய பணம் 15 வருட காலத்திற்கு முடக்கி வைக்கப்படுகிறது.

  • பண வீக்கத்தை பொறுத்து இதன் மூலமாக கிடைக்கும் ரிட்டன் மாறாது.

இதையும் படிக்க:
டிகிரி மட்டும் போதுமா…? பெற்றோர்கள் ஏன் எதிர்காலத்திற்கான திறன்களில் முதலீடு செய்ய வேண்டும்…?

எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் (EPF)

விளம்பரம்

EPF என்பது 20 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அடங்கிய ஒரு நிறுவனத்தில் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக கொண்டிருக்க வேண்டிய சேமிப்புத் திட்டம். இதில் வேலை செய்பவர் மற்றும் முதலாளி ஆகிய இருவருமே EPF அக்கவுண்டில் பணத்தை செலுத்துவார்கள்.

முக்கியமான அம்சங்கள்

  • அடிப்படை சம்பளம் மற்றும் டியர்னஸ் அளவன்ஸ் ஆகியவற்றில் 12 சதவீத தொகையை ஊழியர் மற்றும் முதலாளி ஆகிய இருவரும் செலுத்த வேண்டும்.

  • இதற்கான வட்டி விகிதம் 2023-24 நிதியாண்டின் படி 8.15 சதவீதம்.

  • அரசு ஆதரவு பெற்றுள்ளதால் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய எந்த ஒரு தயக்கமும் தேவையில்லை.

வரி பலன்கள்

இதில் செய்யும் முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டத்தில் உள்ள பிரிவு 80Cன் கீழ் 1.5 லட்சம் வரை டிடக்ஷன் பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் ஒரு வருடத்திற்கு பெரும் 2.5 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த தேவையில்லை. மெச்சூரிட்டி தொகையை பொறுத்தவரை ஓய்வு காலம் வரை கொண்டிருக்கும் பட்சத்தில் வரி கிடையாது.

விளம்பரம்

நன்மைகள்

  • வேலை செய்யும் நிறுவனமும் பணத்தை முதலீடு செய்வதால் இது ஊழியர்களை சேமிப்பதற்கு ஊக்குவிக்கிறது.

  • கல்வி, வீடு வாங்குதல் அல்லது மருத்துவ தேவை போன்ற குறிப்பிட்ட சில காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே வித்ட்ரா செய்வதற்கான அனுமதி கிடைக்கிறது.

  • PPF உடன் ஒப்பிடும்போது அதிக வட்டி கொடுக்கப்படுகிறது.

தீமைகள்

  • மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நபர்கள் மட்டுமே இதில் பங்கு பெற முடியும்.

  • ஒரு வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாயை விட அதிகமாக பெறும் வட்டி தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.

இதையும் படிக்க:
sukanya samriddhi yojana scheme : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இவ்வளவு பிளஸ் பாயிண்ட் இருக்கா..? முழு விவரம்!

நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS)

NPS என்பது மார்க்கெட் உடன் தொடர்புடைய ஓய்வு கால சேமிப்பு திட்டமாக அமைகிறது. இதில் அனைத்து இந்திய குடிமக்களும் பங்கு பெறலாம்.

முக்கியமான அம்சங்கள்

  • இதில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது.

  • இதற்கான வட்டி சந்தையை பொறுத்து அமையும். இதுவரை 8 முதல் 10 சதவீதம் வரை கிடைக்கப் பெற்றுள்ளது.

  • இந்த திட்டத்தில் உள்ள ரிஸ்க் பற்றி பேசும்போது, மிதமான முதல் அதிக அளவு ரிஸ்க் இருக்க வாய்ப்புள்ளது.

வரி பலன்கள்

வருமான வரிச் சட்டத்தில் உள்ள பிரிவு 80Cன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் டிடக்ஷன் பெறலாம். மேலும் 80CCD(1B)ன் கீழ் 50,000 ரூபாய் கூடுதலாக டிடக்ஷன் பெற்றுக் கொள்ளலாம். மெச்சூரிட்டியின்போது வித்ட்ரா செய்யப்படும் 60 சதவீத பணத்திற்கு வரி கிடையாது. மீதமுள்ள 48% பணத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

விளம்பரம்

நன்மைகள்

  • அதிக ரிட்டன்

  • எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.

  • கூடுதல் வரி பலன்கள்

தீமைகள்

  • சந்தையுடன் தொடர்புடையது

  • ஓய்வு காலத்திற்கு முன்பு வித்ட்ரா செய்வதற்கு ஒரு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

குளிர்காலத்தில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் குறைந்த கிளைசெமிக் கொண்ட 5 சூப்கள்.!


குளிர்காலத்தில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் குறைந்த கிளைசெமிக் கொண்ட 5 சூப்கள்.!

எந்த திட்டத்தை தேர்வு செய்யலாம்?

இந்த 3 திட்டங்களில் நீங்கள் எந்த திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் என்பது தனிநபரின் ரிஸ்க் எடுப்பதற்கான முடிவு, முதலீட்டு தொகை மற்றும் பொருளாதார இலக்குகளின் அடிப்படையில் அமையும். PPF மற்றும் EPF ஆகியவை உறுதி அளிக்கப்பட்ட ரிட்டன்களை எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாமல் வழங்குகின்றன. அதே நேரத்தில் ரிஸ்க் இருந்தாலும் பரவாயில்லை, அதிக ரிட்டன்களை பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு NPS திட்டம் சிறப்பானதாக இருக்கும்.

விளம்பரம்

.



Source link