Last Updated:

மெல்போர்ன் மேட்ச்சுக்கு பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான தரவரிசை பட்டியல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தென்னாப்பிரிக்க அணி 66.67 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 61.46 வெற்றி சதவீதத்துடன் 2 ஆம் இடத்திலும் உள்ளன.

News18

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஃபைனலில் பங்கேற்பதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு குறைந்துள்ளது.

இந்த போட்டியில் முதல் அணியாக தென்னாப்பிரிக்கா நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தகுதி பெற்றது. 2 ஆவது எந்த அணி தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கடும் போட்டியில் இருந்தன.

இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தொடரில் முன்னிலை பெற்றது.

மெல்போர்ன் மேட்ச்சுக்கு பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான தரவரிசை பட்டியல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தென்னாப்பிரிக்க அணி 66.67 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 61.46 வெற்றி சதவீதத்துடன் 2 ஆம் இடத்திலும் உள்ளன.

இந்திய அணி 52.78 வெற்றி சதவீதத்துடன் 3ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு மீதம் 1 போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு 3 போட்டிகளும் இருக்கின்றன. சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்தாலோ அல்லது டிரா செய்தாலோ டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற முடியாது.

இதையும் படிங்க – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முதல் அணியாக ஃபைனலுக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா…

சிட்னி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறுவதுடன், ஆஸ்திரேலியா – இலங்கை டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோல்வியடைய வேண்டும். இவை நடந்தால்  மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.



Source link