ஓப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ஃபைண்டு என்5 பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எஸ்ஓசி (SoC) உடன் வரும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓப்போ நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி பீட் லாவ் இதுகுறித்து பேசும் போது, வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் “மிகவும் மெல்லியதாகவும், மடிக்கக்கூடியதாகவும் இருக்கும்” என்று சமீபத்திய டீஸரில் தெரிவித்தார்.

சமீபத்திய ஐபோன் மாடலுடன் ஒப்பிடும்போது, அதன் மெல்லிய வடிவமைப்பைக் காட்டிய ஓப்போவின் நிர்வாகி ஒருவர், இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை குறிப்பிட்ட நேரம் வரை தண்ணீரில் வைக்க முடியும் என்றும், இந்த புதிய ஸ்மார்ட்போன் அதன் முந்தைய மாடலைப் போல இல்லாமல், வேகமான வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தையும் கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஓப்போ ஃபைண்டு தொடரின் தயாரிப்புத் தலைவரான ஹோ யியாஃபோ, சீனாவின் மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் (Weibo) இரண்டு பதிவுகளை பகிர்ந்து கொண்டார். அதில், இந்த ஸ்மார்ட்போன் குறித்த இரண்டு முக்கிய அம்சங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் பதிவு, இந்த புதிய ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓப்போ ஃபைண்டு எக்ஸ்8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 13 போன்ற ஸ்மார்ட்போனின் வயர்லெஸ் சார்ஜிங் திறன்களுடன் ஒத்துப்போகும் என்பதைக் காட்டுகிறது.

ஓப்போ ஃபைண்டு என்5 50 வாட் ஏர்வூக் (AIRVOOC) வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவை வழங்கும் என்பதையும் ஓப்போ நிறுவனத்தின் நிர்வாகி உறுதிப்படுத்தினார். பிஒய்டி (BYD), என்ஐஓ (NIO) மற்றும் பல பிரபலமான எலெக்ட்ரிக் கார் பிராண்டுகளில் உள்ள வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களும், ஓப்போவின் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சார்ஜிங் காயிலின் அடர்த்தியை கணிசமாக குறைப்பதன் மூலம் வேகமான வயர்லெஸ் சார்ஜிங்கை வழங்க முடிந்தது என்று நிறுவனம் கூறுகிறது, இது வழக்கத்தை விடவும் மெல்லியதான மடிக்கக்கூடிய வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும், இந்த அம்சத்தை சந்தையில் அறிமுகப்படுத்த நிறுவனம் ஆவலாக இருக்கிறது.

இவரின் சமீபத்திய மற்றொரு பதிவில், ஓப்போ ஃபைண்டு என்5 வாட்டர் ரெசிஸ்டண்ட் அம்சத்தை காட்டும் ஒரு வீடியோவும் இடம்பெற்றுள்ளது. அதில், இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டன்டுக்கான IPX9 ரேட்டிங்கைக் கொண்டுள்ளது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

மேலும், முந்தைய ஓப்போ ஃபைண்ட் என்3 அல்லது ஒன்பிளஸ் ஓபன் மாடல்களுடன் ஒப்பிடும்போது இந்த மாடல் மிகவும் மெல்லியதாக இருக்கிறது, ஆனால் ஒட்டுமொத்தமாக பெரிய தோற்றத்தைக் கொண்டுள்ளது.

ஓப்போ ஃபைண்டு என்5 பற்றிய பல்வேறு வதந்திகளுக்குப் பிறகு, சமீபத்தில் ஓப்போ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் முதல் அதிகாரப்பூர்வ தெளிவான புகைப்படங்களை வெளியிட்டது, மேலும் அதன் மடிக்கக்கூடிய வடிவமைப்பின் ஒரு பகுதியையும் மக்களின் பார்வைக்கு கொண்டு வந்தது. முன்னதாக வெளியிடப்பட்ட புகைப்படங்களின்படி, இந்த ஸ்மார்ட்போனானது யூஎஸ்பி சி போர்ட்டுடன் மெல்லியதாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.



Source link