ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் இன்று (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
அதன்படி, விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக வை.எல்.மொஹமட் நவவி நியமிக்கப்பட்டுள்ளதுடன், சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கே.ஆர்.உடுவாவல நியமிக்கப்பட்டுள்ளார்.
The post மேலும் 2 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் appeared first on Thinakaran.