ஹேக்கர்களிடம் சிக்கிக் கொள்வதை தவிர்க்கும் விதமாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் ஆபிஸ் பயனர்கள் தங்களது சிஸ்டமை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. செப்டம்பர் 11-ந் தேதி, இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் அல்லது CERT-In உயர் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆபிஸ் மற்றும் கிளவுட் வாடிக்கையாளர்களுக்கு இந்த வாரம் இந்திய அரசிடம் இருந்து முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலை மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது சரி செய்துள்ளது. எனினும் நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் ஆபிஸ் யூசர்கள், பாதிக்கப்பட்ட கணினிகளில் ஹேக்கிங் முயற்சிகள் குறித்து விழிப்புடன் இருப்பது மற்றும் மைக்ரோசாப்ட் வழங்கிய சமீபத்திய விண்டோஸ் மற்றும் ஆஃபீஸ் பேட்ச் மூலம் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த மைக்ரோசாப்ட்டின் பாதுகாப்பு எச்சரிக்கை: CERT-ன் எச்சரிக்கை:
கடந்த செப்டம்பர் 11-ன் தேதியன்று, இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் அல்லது CERT-In வெளியிட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கையில், பின்வரும் மைக்ரோசாப்ட் தயாரிப்புகளை பாதிக்கும் உயர் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
– மைக்ரோசாப்ட் விண்டோஸ்
– மைக்ரோசாப்ட் ஆபீஸ்
– மைக்ரோசாப்ட் டைனமிக்ஸ்
– அசூர்
– எக்ஸ்டெண்டட் செக்யூரிட்டி அப்டேட்ஸ் (ESU)
– மைக்ரோசாப்ட் SQL சர்வர்
CERT-In வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் இதுகுறித்த சிக்கல்களை சுட்டிக்காட்டியுள்ளது. அதில், மைக்ரோசாப்ட் தயாரிப்புகளில் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது ஹேக்கர்களுக்கு மிகவும் சாதகமாகவும், தகவல் வெளிப்படுத்துதலைப் பெறவும், பாதுகாப்புக் கட்டுப்பாட்டை மீறவும், ரிமோட் குறியீடு செயல்படுத்தல் தாக்குதல்களை நடத்தவும், கணிணி வழி தாக்குதல்களை நடத்தவும் அனுமதிக்கும் அல்லது சேவை மறுப்பு (DoS) நிபந்தனைகளை உருவாக்கும். CERT-In இணையதளத்தில் இந்த அபாயங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த விரிவான விவரங்களைப் பெறலாம்.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
இதில் ஓர் நல்ல செய்தி என்னவென்றால், மைக்ரோசாப்ட் ஏற்கனவே இந்தச் சிக்கல்களைக் கவனித்ததோடு, இந்தப் பயனர்கள் அனைவரும் தங்கள் கணினிகள், மென்பொருள் மற்றும் பிற கருவிகளை நிறுவனத்திடமிருந்து இப்போதே அப்டேட் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுகுறித்த மைக்ரோசாப்ட் செய்திகளில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த மாத இறுதியில் ஒரு புதிய கோபைலட் நிகழ்வை நடத்துகிறது, அங்கு மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லா மற்றும் அவரது குழுவினர், AI அசிஸ்டண்ட்டின் புதிய பதிப்பு குறித்து விவாதிப்பார்கள். மேலும் கோபைலட், ஜெமினி, ChatGPT மற்றும் பல AI தொழில்நுட்பத்திற்கு போட்டியாக கோபைலட்டின் சாத்தியமான ரீபிராண்டிங் குறித்து இந்த குழுவில் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
.