மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த வருடத்தில் 5 வீதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த வருடத்தில் 4.5 வீதம் முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பலரும் தெரிவித்துவரும் கூற்றுக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், அரசாங்கம் கடனை மீள செலுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்தால் நாடு நெருக்கடிக்குள்ளாகும் என்ற கூற்று தவறானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் நாடு தற்போதைய பாதையிலேயே தொடர்ந்தும் பயணிக்குமானால் நெருக்கடியை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

The post மொத்த உள்நாட்டு உற்பத்தி; இவ்வருடத்தில் 5 வீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் appeared first on Thinakaran.



Source link