Last Updated:
‘யாத்திசை’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரனின் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.
‘யாத்திசை’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரனின் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஜேகே ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே. கமலக்கண்ணன் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கான பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது.
பூஜையில் சக்தி ஃபிலிம் பேக்டரியின் விநியோகஸ்தர் பி.சக்திவேலன், ஜி.தனஞ்செயன், சித்ரா லட்சுமணன், ’அயலி’ வெப் சீரிஸ் புகழ் இயக்குநர் முத்து, தயாரிப்பாளர் கணேஷ் காமன் மேன், யூடியூபர் மதன் கௌரி, மிஸ்டர் ஜி.கே. மற்றும் செர்ரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
’யாத்திசை’ படத்தில் நடித்த நடிகர் சேயோன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘விடுதலை’ படத்தின் நாயகி பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரகனி இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் ஜே.கமலக்கண்ணன் கூறுகையில், “திரையுலகில் என்னுடைய சிறிய பங்கும் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. ’யாத்திசை’ படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தரணி ராசேந்திரனுடன் ஜேகே ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறது. எங்கள் தயாரிப்பு நிறுவனம் நல்ல படங்களைத் தரவும், திறமையான மற்றும் ஆர்வமுள்ள படைப்பாளிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.
January 21, 2025 2:28 PM IST