யாழ். மாவட்டத்தின் வெளி மாவட்ட பஸ் நிலையம் இதுவரை முழுமையாக சீரமைக்கப்படவில்லை என யாழ். வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளி மாவட்டங்களுக்கு பயணிக்கும் பயணிகளுக்கென விசேட பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தனியார் பஸ் சேவைகள் மாத்திரமே அவ்விடத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சேவைகளும் அந்தத் தரிப்பிடத்திலிருந்து இடம்பெறவேண்டும். பிற மாவட்டங்களில் வெளிமாவட்ட சேவைகள் அவ்வாறே இடம்பெறுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோப்பாய் குறூப் நிருபர்
The post யாழ். மாவட்ட பஸ் தரிப்பு முழுமையான சீரமைப்பில்லை appeared first on Thinakaran.