யாழ். காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு 06 நாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக, காங்கேசன்துறை, நாகப்பட்டினம் கப்பல் சேவை முதலீட்டாளரும் சுபம் குழுமத்தின் தலைவருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்குமிடையிலான கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரியில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, இதனை சுபம் நிறுவனமே நேரடியாக கையாளப்போகிறது. தற்போது இருவழிக் கட்டணமாக 9,700 இந்திய ரூபா அறவிடப்படுகின்றது. அதனை நாம் 8,500இந்திய ரூபாவாக மாற்றியமைப்பதோடு 10 கிலோ எடையுடைய பொதியையும் இலவசமாகக் கொண்டுவர முடியும்.
மேலதிகமாக, அதிக எடையுடைய பொதிகளை கொண்டுசெல்வதாக இருந்தால் அதற்கான மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான தொகைகள் எமது உத்தியோகபூர்வமான sailsubham.com இணைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான தகவல்கள் 04 ஆம் பக்கம்
The post யாழ். KKS – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை ஜனவரியில் மீள ஆரம்பம் appeared first on Thinakaran.