Last Updated:
நடிகர் விஷாலுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மேடையில் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஷால் குறித்து அவதூறு பரபரப்பியதாக நடிகர் நாசர் அளித்த புகாரின் பேரில் யூடியூபர் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் விஷால் நடித்து வெளியான மதகஜராஜா திரைப்பட வெளியீட்டின்போது நடிகர் விஷாலுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மேடையில் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் யூடியூபர் சேகுவாரா என்பவர், “நடிகர் விஷால் மதுபழக்கத்திற்கு அடிமையானதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கைகால் நடுக்கம் ஏற்பட்டதாக” யூடியூப் சேனல்களில் பேட்டியளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், யூடியூபர் சேகுவாரா மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் புகார் அளித்தார். நடிகர் நாசர் அளித்த புகாரின்பேரில் யூடியூப்பர் சேகுவேரா மீதும், 2 யூடியூப் சேனல்கள் மீதும் தேனாம்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதன்படி அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
January 23, 2025 4:41 PM IST