Youtube இன்று எந்த அளவிற்கு பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். யூடியூப்பை தினம் தினம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் தங்களுடைய வேலையை விட்டுவிட்டு யூடியூபராக மாறி, அதில் அதிக அளவு பணத்தை சம்பாதித்து வருகின்றனர். இது மாதிரியான கிரியேட்டர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக தற்போது யூடியூப் ஷாப்பிங் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விளக்கமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Youtube அதன் ஷாப்பிங் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக கிரியேட்டர்கள் Flipkart மற்றும் Myntra போன்ற பிரபலமான நிறுவனங்களில் உள்ள ப்ராடக்டுகளை டேக் செய்து பிரமோட் செய்யலாம். கிரியேட்டர்கள் நேரடியாக அவர்களுடைய லைவ் ஸ்ட்ரீம், வீடியோக்கள் மற்றும் ஷார்ட்ஸ் மூலமாக இதனை செய்து கமிஷன்களை இனி சம்பாதிக்கலாம். இந்த திட்டம் மூலமாக யூசர்கள் தங்களுக்கு விருப்பமான யூடியூப்பர்கள் பரிந்துரை செய்யும் ப்ராடக்டுகளை யூடியூப்பில் இருந்தே வாங்கலாம். வருமானத்திற்கான ஒரு கூடுதல் மூலத்தை வழங்குவதன் மூலமாக இந்த திட்டம் கிரியேட்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் இடையேயான ஒரு உறவை மேம்படுத்துகிறது.

விளம்பரம்

விளம்பரங்கள் மூலமாக பெறப்படும் வழக்கமான வருமானம், யூடியூப் ப்ரீமியம் மற்றும் பிராண்டுகளுடன் இணைவதால் கிடைக்கும் வருமானத்தோடு இனி கிரியேட்டர்களுக்கு இந்த வருமானமும் கிடைக்கும். மகேந்திரா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுடைய பிளாட்ஃபார்மில் உள்ள ப்ராடக்டுகளை விளம்பரப்படுத்தி தங்களுடைய வீடியோ மூலமாக பார்வையாளர்களை கவரலாம்.

“கஸ்டமர்களுடனான உறவை சிறந்த முறையில் மேம்படுத்திக் கொள்வதற்கு கிரியேட்டர் மூலமாகவே ப்ராடக்டுகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சி இது” என்று Flipkart குழுமத்தின் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் ரவி ஐயர் கூறியுள்ளார். இந்தியாவில் அதிவிரைவாக பரவி வரும் டிஜிட்டல் எக்கோ சிஸ்டத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த முயற்சி அமைகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க: SBI, HDFC, ICICI வங்கி FDக்கு கொடுக்கும் வட்டி விகிதங்கள் எவ்வளவு தெரியுமா?

தகுதியுள்ள கிரியேட்டர்கள் இந்த திட்டத்திற்கான அணுகலை பெற்று தாங்கள் ப்ரமோட் செய்ய நினைக்கும் ப்ராடக்டுகளை லைவ் ஸ்ட்ரீம், வழக்கமான வீடியோக்கள் மற்றும் ஷார்ட்ஸ் போன்ற வீடியோகளில் டேக் செய்ய யூடியூப் ஸ்டுடியோ அனுமதிக்கிறது. டேக் செய்யப்பட்டுள்ள ப்ராடக்டுகளை பார்வையாளர்கள் ரீடெயிலர்களின் வெப்சைட் மற்றும் ப்ராடக்ட் மற்றும் டிஸ்கிரிப்ஷன் பிரிவில் எளிமையாக வாங்கிக் கொள்ளலாம்.

இதையும் படிக்க:
அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு.. எவ்வளவு தெரியுமா? – நிதி அமைச்சகம் வெளியிட்ட டேட்டா!

விளம்பரம்

இன்றைய பொருளாதாரம் ஒரு பொருளை வாங்குவதற்கு பொதுமக்களுக்கு பரிந்துரை செய்ய டிஜிட்டல் வீடியோக்களை அதிகம் நம்பியுள்ளது. 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்திய கன்ஸ்யூமர்கள் கிரியேட்டர்கள் பரிந்துரைகளில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். சொல்லப்போனால் வழக்கமான விளம்பரங்களைக் காட்டிலும் யூடியூப் மூலமாக செய்யப்படும் பரிந்துரைகள் அதிக நம்பகத்தன்மையை கொண்டுள்ளன. எனவே இந்த புதிய திட்டம் நிச்சயமாக சிறந்த முறையில் வெற்றி பெறும் என்று யூடியூப் நம்புகிறது.

.



Source link