ரஜினிகாந்த்தின் பிறந்த நாளையொட்டி கூலி படத்திலிருந்து பாடல் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 56 வினாடிகள் கொண்ட இந்த க்ளிம்ஸ் வீடியோ ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினிகாந்த் இன்று தனது 74 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட ஏராளமான ஒரு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் முழுவதும் ரஜினி உடைய வீடியோக்கள் அதிகம் காணப்படுகிறது.

ரஜினி நடிக்கும் கூலி படத்தில் இருந்து அப்டேட்டுகளை ரசிகர்கள் நேற்றிலிருந்து எதிர்பார்த்தனர். இருப்பினும் இன்று மாலை மட்டுமே கூலி படத்தில் இருந்து அப்டேட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாலை 6 மணி அளவில் கூலி படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சியின் சிறு பகுதி வெளியிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

56 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ காட்சி யூட்யூபில் லைக்ஸ்களை குவித்து டிரெண்டாகி வருகிறது. இந்த பாடல் காட்சி அறிமுக பாடலாக அமையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் ரஜினிகாந்த் துள்ளலாக வீடியோவில் ஆட்டம் போடுகிறார்.

இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் சமூகவலை தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க – அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு பேசிய விக்னேஷ் சிவன்.. ஷாக்கான அமைச்சர்..!!

இதற்கிடையே ரஜினி நடிக்க உள்ள ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

விளம்பரம்

.



Source link