Last Updated:

Rajini | நடிகர் ரஜினிகாந்துக்கு பொங்கல் தின வாழ்த்துகளை தெரிவிக்க வெளியூர்களிலிருந்து அவர் வீட்டுக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

News18

நடிகர் ரஜினிகாந்துக்கு பொங்கல் தின வாழ்த்துகளை தெரிவிக்க வெளியூர்களிலிருந்து அவர் வீட்டுக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. 13-ம் தேதி தொடங்கிய இந்தப் படப்பிடிப்பு 28-ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்க: Vijay Sethupathi | விஜய் சேதுபதியின் புதிய அவதாரம்…ரசிகர்களுக்கு ட்ரீட் காத்திருக்கு!

இந்நிலையில், பொங்கல் தினத்தன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவிக்க ரஜினி ரசிகர்கள் வெளியூர்களில் இருந்து வருகை தந்த நிலையில், படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், பொங்கல் தினத்தன்று நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்திக்க முடியாமல் அவருடைய ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.



Source link