கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கொழும்பு குற்றப்பிரிவு நேற்று(31) 2 மணிநேரம் விசாரணை நடத்தியது.

சிவில் செயற்பாட்டாளரான நாமல் குமாரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இதற்கு முன்னர் அவரிடம் வாக்குமூலங்களையும் பதிவு செய்திருந்தனர்.

நடிகர் ரஞ்சன் ராமநாயக்க கர்தினாலை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலான ஒலிப்பதிவுகள் தம்மிடம் இருப்பதாகக் கூறும் நாமல் குமார, இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மற்றும் கர்தினால் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நாமல் குமாரவிடம் வாக்குமூலம் பெற உள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ரஞ்சன் மீண்டும் சிக்கலில்.. சிஐடி விசாரணை.. appeared first on Daily Ceylon.



Source link