Last Updated:

ரயில் பெட்டியில் அமைதியாக போர்வையை போர்த்தியபடி உட்கார்ந்திருந்த பெண்ணை சைக்கோ இளைஞர் கொளுத்தி விட்டு ரசித்த கொடூரக் காட்சிகள் வெளியாகியுள்ளன. சம்பந்தமே இல்லாமல் பெண்ணை கொளுத்தியது ஏன்? அருகில் இருந்தவர்கள் உடனே காப்பாற்ற முயலாதது ஏன்? ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?.

அமெரிக்காவின் நியூயார்க் நகர சுரங்கப்பாதையில் ரயில் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தனது லைட்டரால் தீவைத்து கொளுத்தி விட்டு அதை அருகிலேயே அமர்ந்து ரசித்துப் பார்த்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சைக்கோ இளைஞரின் பின்னணி என்ன?

நியூயார்க் நகரம் புரூக்ளினில், கோனி ஐலேண்ட்- ஸ்டில்வேல் அவென்யூ ரயில் நிலையம் அமைந்துள்ளது. சுரங்கப்பாதையில் அமைந்துள்ள இந்த நிலையத்திற்கு காலை 7.30 மணியளவில் ரயில் ஒன்று வந்து நின்றுள்ளது. அந்த ரயிலின் கடைசி பெட்டியில் பெண் ஒருவர் போர்வையை போர்த்தியபடி அமர்ந்திருந்தார். அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அவர் அருகில் அமர்ந்திருக்கிறார்.

சிறிது நேரம் அந்த பெண்மணியை கவனித்துக் கொண்டிருந்தவர் திடீரென தனது பாக்கெட்டிலிருந்து லைட்டரை எடுத்து அந்த போர்வையில் பற்ற வைத்துள்ளார். சில நொடிகளில் அந்த போர்வை திகுதிகுவென பற்றி எரிய புகை மண்டலமாக அந்த இடமே மாறியுள்ளது.

இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண்மணி தீ உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், அலறியபடி ரயில் பெட்டிக்குள்ளேயே நின்றுள்ளார். ரயில் பெட்டியிலிருந்து வெளியே வந்த அந்த சைக்கோ மர்மநபர் இந்த காட்சிகள் அனைத்தையும் அங்கிருந்த பிளாட்பாரத்தில் சேரில் அமர்ந்து நிதானமாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

அங்கிருந்த பலர் இந்த காட்சிகளை தங்களது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் யாரும் அந்த பெண்மணியை காப்பாற்ற முயலவில்லை. உடனே அங்கிருந்த போலீசாருக்கு தகவல் பறந்த நிலையில் விரைந்து வந்த அவர்கள் அந்த பெண் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் அந்த பெண் உயிரிழந்து விட்டார். போலீஸ் வருவதற்கு முன்னரே அந்த சைக்கோ நபர் அங்கிருந்து தப்பி மற்றொரு ரயில் ஏறி தப்ப முயன்றுள்ளார். பொதுமக்கள் போலீசாருக்கு சந்தேக நபர் குறித்து தகவல் அளிக்க விரைந்து வந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

Also Read | Vinod Kambli: காய்ச்சலுக்காக மருத்துவமனை சென்ற வினோத் காம்ப்ளி.. பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி!

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த பெண்ணுக்கும், மர்மநபருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. பிடிபட்ட நபர் கௌதமாலாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அரிசோனா வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார்.

அவரது குடியேற்ற நிலையை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர் மீது நியூயார்க் நகரில் எந்தவித குற்றப்பதிவும் இல்லை என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். விசாரணைக்குப் பிறகே எதற்காக அப்பாவி பெண்ணை கொடூரமாக கொலை செய்தார் என்ற தகவல் தெரியவரும்.



Source link