திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் என்பது அறிவுப்பூர்வமான விஷயத்திற்கும் பொழுதுபோக்குக்கும் சிறந்த இடமாகத் திகழ்கிறது. இங்குத் தினமும் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இங்கு வந்து அறிவியலை கற்றுச் செல்கின்றனர். பலர் குடும்பத்துடன் இங்கு வந்து பொழுதைக் கழித்துச் செல்கின்றனர். ஏனென்றால் அறிவியல் மையத்தைச் சுற்றி ஏராளமான செடி கொடிகள் உட்காருவதற்கு இடங்கள் உள்ளன.

இரண்டு தளத்தில் எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஏராளமான உபகரணங்கள் உபயோகத்தில் உள்ளன. இதனை மாணவ மாணவிகள் நேரடியாகப் பயன்படுத்தி அதன் ரிசல்டை உடனே தெரிந்து கொள்ளலாம்.

விளம்பரம்

ஒவ்வொரு உபகரணங்களையும் எவ்வாறு இயக்க வேண்டும் என்பது தொடர்பாகத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அதன் அருகே எழுதப்பட்டிருக்கும். இந்நிலையில் விண்வெளி தொழில்நுட்பக் காட்சியரங்கம் அறிவியல் மையத்தில் திறக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரட்டும் சர்க்கரை நோய்… அதிர்ச்சி அளிக்கும் காரணம்…

இதுகுறித்து மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.எம். குமார் கூறுகையில், “ஏற்கனவே மாவட்ட அறிவியல் மையத்தில் ஏராளமான உபகரணங்கள் உள்ளன. தினம்தோறும் மாணவர்கள் இதன் மூலம் பயன் பெற்று வருகின்றனர். கூடுதலாக இந்த அரங்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் ஏராளமான ராக்கெட் அதற்கான பாகங்கள் உள்ளன. சில உண்மையான பாகங்களையும் எடுத்து வந்து வைத்துள்ளோம். ஏவூர்திகள் எவ்வாறு பறக்கின்றன என்பது குறித்து இரண்டு ராக்கெட் உபகரணம் வைத்துள்ளோம்.

விளம்பரம்

ஏவூர்திகள், காற்று நிறைந்த ஒரு ஊதற்பையை போல இயங்குகின்றன. ஏவூர்திகளைப் பற்றி நினைக்கும்போது நாம் ஊதற்பைகளை பற்றி நினைப்பதில்லை. செயற்கைக்கோள்கள், பயன்பாட்டுப் பொருட்கள் அல்லது மனிதர்களை விண்வெளிக்குச் சுமந்து செல்லும் பெரிய ஏவூர்திகளைப் பற்றி மட்டுமே நாம் நினைக்கிறோம்.

ஆனால் ஊதற்பைகளும் ஏவூர்திகளும் பணியொத்தவையே. அழுத்தப்பட்ட காற்று எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதிலேயே அவை பெரிதும் வேறுபடுகின்றன. திட எரிபொருள், திரவ எரிபொருள் அல்லது இவற்றின் கலவையாலான எரிபொருட்களை எரிப்பதன் மூலம் ஏவூர்திகளில் வாயுக்கள் உருவாக்கப்படுகின்றன.

விளம்பரம்

இதையும் படிங்க: கங்குவா ஹீரோ, வில்லனா மாறும் ரசிகர்கள்… நெல்லையில் இந்த நிறுவனம் செய்ததை பாருங்க…

புவி சுற்றுப்பாதையை அடைவதற்கு ஒரு ஏவூர்தி நொடிக்கு 8 கிலோமீட்டர், அதாவது ஒரு பயணிகள் விமானத்தை விட 25 மடங்கு வேகத்திற்கு முடுக்கப்பட வேண்டியிருக்கிறது. புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபடுவதற்கு இன்னும் வேகமாகப் பயணிக்க வேண்டியிருக்கிறது. விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படும் கலச்சுமை என்றழைக்கப்படும் பொருள் சிறியதாக இருப்பினும் கூட, அத்தகைய வேகத்தில் அனுப்புவதற்கு ஏராளமான சக்தி தேவைப்படுகிறது. ஏவூர்திகள் அதற்குத் தேவையான சக்தியை உந்து பொருளாகிய எரிபொருள் வடிவில் சுமந்து செல்கின்றன.

விளம்பரம்

ஒரு ஏவூர்திக்கு ஏராளமான அளவில் எரிபொருள் மற்றும் அதனை எரிய வைப்பதற்கான ஆக்ஸிஜன் அல்லது ஆக்ஸிஜனேற்றி தேவைப்படுகிறது. காற்றில்லா வெளியில் ஏவூர்தி பறப்பதால் எரிபொருளை விட அதிக எடை கொண்ட, தேவையான ஆக்ஸிஜனேற்றியையும் அது சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஏவூர்தி முதலில் மேலெழும் போது, கலச்சுமையை மட்டுமல்லாது அதைவிட அதிக எடை கொண்ட எரிபொருட்கலவையையும் தூக்கி செல்ல வேண்டியிருக்கிறது.

புவி சுற்றுப்பாதைக்குச் செல்லும் ஒரு ஏவூர்தியில் எரிபொருளானது கலச்சுமையை விட குறைந்த பட்சம் 20 மடங்கு அதிகமாக இருக்கிறது. ஒரு ஏவூர்தியின் எடையில் பெருமளவு எரிபொருளாகவே இருக்கிறது. பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே சூழ்ந்திருக்கும் விண்வெளியானது பூமியிலிருந்து 100 கி.மீ. உயரத்திலிருந்து தொடங்குகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: என்னது தூத்துக்குடில வஞ்சிரம் கிடையாதா… இது தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க…

விண்மீன்களால் நிறைக்கப்பட்ட கறுப்பு கம்பளம் போன்று புறவிண்வெளி காட்சியளிக்கிறது. சூரியன், சந்திரன், கோள்கள் மற்றும் அவற்றின் துணைக்கோள்கள், குறுங்கோள்கள், வால் விண்மீன்கள், விண்மீன்கள் மற்றும் உடுமண்டலங்கள் ஆகிய அனைத்தும் விண்வெளியில் உள்ளன” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.



Source link