Last Updated:
கனடா தனி நாடாக செயல்படுவதற்கு தேவையான மானியங்களை அமெரிக்காவால் வழங்க முடியாது என்பதை அறிந்து தான் ட்ரூடோ ராஜினாமா செய்துவிட்டார்
அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா இணைந்தால் அந்நாட்டின் மீது எந்த வரியும் விதிக்கப்படாது என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு முக்கிய கட்சியான புதிய ஜனநாயக கட்சி அளித்து வந்த ஆதரவை விலக்கிய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கனடா பிரதமர் வெளியிட்ட இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்தார். 10 ஆண்டுகளாக தொடர்ந்து அவர் கனடா பிரதமராக இருந்து வந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமாவை அறிவித்திருக்கிறார்.
கனடா அதிபர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்துள்ள நிலையில் சமூக வலைதளத்தில் டொனால்ட் ட்ரம்ப் ஒரு முக்கிய பதிவை பதிவிட்டுள்ளார். அதில் கனட மக்கள் பலர் அமெரிக்காவுடன் இணைந்திருக்க விரும்புகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
கனடா தனி நாடாக செயல்படுவதற்கு தேவையான மானியங்களை அமெரிக்காவால் வழங்க முடியாது என்பதை அறிந்து தான் ட்ரூடோ ராஜினாமா செய்துவிட்டார் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் இணைந்துவிட்டால், வர்த்தக வரி இருக்காது, எந்த வரியும் விதிக்கப்படாது என்றும், கனடாவை எப்போதும் சுற்றி வளைத்து அச்சுறுத்தி வரும் ரஷ்யா மற்றும் சீன கப்பல்களிடமிருந்து முற்றிலுமாக பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கனடா இணைந்துவிட்டால், அமெரிக்கா இன்னும் சிறப்பான நாடாக இருக்கும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
January 07, 2025 7:03 PM IST