ரிலையன்ஸ் உடன் இணைந்து டிஸ்னி ஹாட்ஸ்டார் பொழுதுபோக்கு துறையில் சேவைகளை வழங்குவது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு நிறுவனத்தை ரிலையன்ஸ் நிர்வகிக்கும் என்றும இதன் தலைவராக நீடா அம்பானி செயல்படுவார் எனவும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Also Read: 
Gold Rate: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் லிமிடெட், வயாகாம் மீடியா மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனங்கள் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இன்றுமுதல் செயல்பாடுகள் நடைமுறைக்கு வந்திருப்பதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கூட்டு நிறுவனங்கள் அடிப்படையில் செயல்படும் இதில், ரிலையன்ஸ் மட்டும் ரூ. 11 ஆயிரத்து 500 கோடியை முதலீடு செய்திருக்கிறது. இந்த கூட்டு நிறுவனத்தின் தலைவராக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி செயல்படுவார். துணை தலைவராக உதய் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த கூட்டு நிறுவனத்தின் வளர்ச்சி வியூகங்களை கவனிப்பார்.

டிவி மற்றும் டிஜிட்டல் தளத்தில் இந்த கூட்டு நிறுவனமானது அதிரடி திருப்பங்களை ஏற்படத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிவி தளத்தில் கலர்ஸ் மற்றும் ஸ்டார் நிறுவனங்களும், டிஜிட்டல் தளங்களில் ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டாரும் இணைந்து பார்வையாளர்களுக்கு ஏராளமான விளையாட்டு மற்றும் பொழுது போக்கு கன்டென்டுகளை தரவுள்ளன. இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த பதிவுகளை ஏராளமான இந்திய பார்வையாளர்கள் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டு நிறுவனங்கள் இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் மிகப்பெரிய தளமாக மாறியுள்ளன. இந்த நிறுவனங்களுடைய கூட்டு வருமானம் ரூ. 26 ஆயிரம் கோடியாக உள்ளது.

விளம்பரம்

ரிலையன்ஸ் + ஹாட்ஸ்டார் கூட்டு நிறுவனத்தால் 100 டிவி சேனல்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு 30 ஆயிரம் மணி நேரத்திற்கும் அதிகமான பொழுது போக்கு கன்டென்டுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும். ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டாருக்கு ஒட்டு மொத்தமாக 5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். விளையாட்டு துறையிலும் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட அனைத்து முன்னணி போட்டிகளையும் இவ்விரு தளங்கள் ஸ்ட்ரீமிங் செய்து வருவத குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க – “சுதந்திரத்திற்கு பிறகு மோடியின் ஆட்சியில் தான் பணவீக்கம் குறைவாக உள்ளது” – பியூஸ் கோயல்

விளம்பரம்

கூட்டு நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு வந்தது குறித்து ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், கையில், ‘ரிலையன்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் கூட்டு நிறுவனத்தால் இந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்கு துறை முற்றிலும் புதுமையான யுகத்திற்குள் நுழைகிறது. இந்திய பார்வையாளர்களுக்கு மிக குறைந்த விலையில் ஏராளமான கன்டென்டுகள் கிடைக்கும். இந்த கூட்டு நிறுவனங்களின் எதிர்கால செயல்பாடுகள் உற்சாகம் அளிக்கிறது. புதிய திட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

.



Source link