Last Updated:
Sachein Movie | நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் வெளியாகி வரும் ஏப்ரல் மாதத்துடன் 20 ஆண்டுகள் ஆகவுள்ளது.
நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் ஜான் மகேந்திரனின் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் தான் சச்சின். குறும்பான காதல் காட்சிகள், வடிவேலுவுடனான காமெடி, தேவிஸ்ரீ பிரசாத்தின் அசத்தலான பாடல்கள் என்று, பலரையும் ஈர்த்த இப்படம் வெளியாகி வரும் ஏப்ரல் மாதத்துடன் 20 ஆண்டுகள் ஆகவுள்ளது.
Also Read: குட் பேட் அக்லி படத்தின் டப்பிங்கை முடித்த அஜித்… போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பு
இதனையொட்டி இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் அண்மையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்தது. இதனால் சச்சின் படமும் நல்ல வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
December 30, 2024 9:22 AM IST