ஒரு வருடத்திற்கு ஒரு கோடி வரை சம்பளம் பெற்று ப்ராடக்ட் மேனேஜ்மென்ட் வேலையில் இருந்து வந்த ஒரு பெங்களூருவை சேர்ந்த இன்ஜினியர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ள விஷயம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருடைய முடிவு ஆன்லைனில் தற்போது மிகப்பெரிய ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வேறொரு கம்பெனியிலிருந்து எந்த ஒரு ஆஃபரும் இல்லாமலேயே வருண் ஹசிஜா என்பவர் தன்னுடைய அதிக வருமான வேலையை அக்டோபர் மாதத்தில் கைவிட்டுள்ளார். “இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் என்னுடைய வாழ்க்கையின் மிகவும் கடினமான முடிவுகளில் ஒன்றை எடுத்தேன். கையில் வேறு எந்த ஒரு வேலையும் இல்லாமலேயே ஒரு கோடி வரை சம்பளம் பெற்று தந்த என்னுடைய வேலையை ராஜினாமா செய்தேன்,” என்று மும்பையில் வாழ்ந்து வரும் ஹசிஜா கூறியுள்ளார்.

விளம்பரம்

இவருடைய பதிவு இன்டர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது. “என்னிடம் எந்த ஒரு பிளானும் இல்லை, பேக்கப்பும் இல்லை. எனக்கு ஒரு பிரேக் வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை நான் எடுத்தேன்,” என்று அவர் கூறியுள்ளார். ஹசிஜா தன்னுடைய இந்த முடிவை திடீரென்று எடுக்கவில்லை. மாறாக தன்னுடைய 10 வருட கெரியரில் தான் ஒரு பிரேக் எடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளார். 30 வயதான அவர் ப்ரொஃபசராக பணிபுரிந்து வரும் தன்னுடைய மனைவியை ஆலோசித்து அவரை பொருளாதாரத்தை சமாளிப்பதற்கான திட்டத்தில் ஈடுபடுத்தி இருவரும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர். அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்கு இருவரும் சேர்ந்து சிறிய மற்றும் பெரிய செலவுகள் அனைத்தையும் கண்காணித்தனர்.

விளம்பரம்

“நான் ஒரு எக்சல் ஷீட்டை உருவாக்கி அதில் வாடகை, மளிகை, இன்சூரன்ஸ், ஹோட்டலில் சாப்பிடுவது, பயணம் போன்றவற்றிற்கான செலவுகளை பட்டியலிட்டேன். ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் பணத்தை நாங்கள் எதில் செலவு செய்திருக்கிறோம் என்பதை கவனித்து, அத்தியாவசிய செலவுகள் மற்றும் ஆடம்பர செலவுகள் என இரண்டையும் பிரித்தோம்,” என்று ஹசிஜா கூறினார். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு தங்களுடைய வாழ்க்கை முறையை பராமரிப்பதற்கு தேவையான தோராயமான சராசரி மாத செலவு என்ன என்பதை ஒரு வழியாக அவர்கள் கண்டுபிடித்தனர். “நான் ஒரு 6 மாத காலத்திற்கு பிரேக் எடுக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். ஆனால் தற்போது மார்க்கெட் எப்படி இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு, கூடுதலாக இன்னும் 6 மாதங்கள் எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

விளம்பரம்
இறைச்சியை விட அதிக புரதம் கொண்ட 9 விதைகள்.!


இறைச்சியை விட அதிக புரதம் கொண்ட 9 விதைகள்.!

6 மாதத்திற்கான சேமிப்பை அந்த தம்பதியினர் ஒரு வருடமாக மாற்றியது எப்படி?

“எங்களுடைய அடிப்படை வாழ்க்கை முறையை பின்பற்றினால் போதும் என்று நாங்கள் திட்டமிட்டோம். ஆடம்பரமான எந்த ஒரு விஷயங்களையும் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தோம். எனினும் எங்களுடைய சௌகரியத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராதவாறு திட்டங்களை அமைத்தோம். ஏதாவது பெரிய செலவுகள் வந்தால் எங்களுடைய முதலீடுகளில் அதை சரி செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். ஒரு வேலைக்கான தேர்வு என்பது மூன்று முக்கியமான காரணிகளை பொறுத்துள்ளது. சந்தோஷம், தாக்கம் மற்றும் செல்வத்தை உருவாக்குதல்.” என்று ஹசிஜா கூறினார். எனினும் இதற்கு முன்பு அவருடைய வாழ்க்கையில் முதல் இரண்டு விஷயங்களும் இல்லாமல் இருந்தது என்று கூறினார். “வேலையில் இருந்து ராஜினாமா செய்வதற்கான இமெயிலை அனுப்பியது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. எனினும் ஒரு சில சமயங்களில் இந்த மாதிரியான முடிவுகளை எடுப்பது அவசியம்.” என்றும் கூறினார்.

விளம்பரம்

கெரியரில் இருந்து பிரேக் எடுக்க விரும்பும் நபர்களுக்கான சில குறிப்புகள் :

முதலில் பிரேக் எடுக்கும் சமயத்தில் எந்த ஒரு பெரிய செலவுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக வீடு வாங்குவது அல்லது உங்களுடைய சம்பளம் இல்லாமல் உங்களால் கையாள முடியாத பெரிய செலவுகள்.

*மேலும் வேலையை ராஜினாமா செய்வதற்கு முன்பு உங்களுடைய குடும்பத்தாரும் நம்பிக்கையுடன் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.

*அவ்வாறு செய்வது விஷயங்களை சுமூகமாக நடத்தி, மன அழுத்தத்தை குறைக்கும்.

*உங்களுடைய பொருளாதாரத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் உங்களுடைய பிரேக்கை உங்களால் மகிழ்ச்சியாக கொண்டாட முடியும்.

விளம்பரம்

.



Source link