குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களான அமேசான், பிளிப்கார்ட் மற்றும் குரோமா ஆகியவை பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ஆன்லைனில் மிகப்பெரிய தள்ளுபடியுடன் விற்பனையாகி வருகின்றன.

அதே நேரத்தில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்களுக்கும் ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. இதில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் SE 2 ஆகிய மாடல்களுக்கு அமேசான் மற்றும் குரோமா நல்ல சலுகைகளை வழங்கி வருகிறது.

ஆப்பிள் வாட்ச் – சிறந்த சலுகைகள்

இதில் குறிப்பாக, சமீபத்திய மாடல்களுக்கு குறைவான தள்ளுபடி மற்றும் சலுகைகளும், பழைய மாடல்களுக்கு அதிக சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்திய மாடலான, 42 மி.மீ. டயல் கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 (ஜிபிஎஸ்), குரோமாவில் ரூ.44,990-க்கு தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. இதன் உண்மையான விலை ரூ.46,900ஆக இருக்கும் நிலையில், யூசர்களுக்கு ரூ.1,910 தள்ளுபடி கிடைக்கும்.

இது தவிர, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி மற்றும் கோடக் வங்கி கிரெடிட் கார்டுகளில் கூடுதலாக ரூ.2,500 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம், இந்த வாட்சை ரூ.42,490-க்கு வாங்க முடியும். கிரெடிட் கார்டு தள்ளுபடியையும் சேர்த்தால் மொத்தமாக ரூ.4,410 விலை குறைக்கப்படுகிறது. இதன் அனைத்து வண்ண மாடல்களும் இதே விலை குறைப்பில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரூ.25,000க்கு கீழ் தற்போது கிடைக்கும் OnePlus 13R…! சலுகையை எவ்வாறு பெறுவது…?

அதே நேரத்தில், ​​ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (ஜிபிஎஸ்), ​​45 மி.மீ. மாடல் குரோமாவில் ரூ.33,990 விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் வாட்ச்சின் இந்த வேரியன்ட் இந்தியாவில் ரூ.44,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டதால், தற்போது நல்ல தள்ளுபடி விலையுடன் இந்த வாட்சை வாங்கலாம். கிட்டத்தட்ட இந்த வேரியண்ட்டுக்கு ரூ.10,910 என்கிற அளவில் மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. வங்கி தள்ளுபடி குறித்து வாட்ச் வாங்கும் நேரத்தில் தெரிந்து கொள்ளவும்.

45 மி.மீ. மிட்நைட் அலுமினியம் மாடலான ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 (ஜிபிஎஸ்) ரூ.30,490 என குறைந்த விலைக்கு கிடைக்கிறது. எனினும், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 உடன் ஒப்பிடுகையில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலை வாங்குவது நல்லது, ஏனெனில், ஆப்பிள் வாட்ச் 9க்கு ரூ.3,500 அதிகமாக செலவு செய்வதன் மூலம் இந்த மேம்பட்ட வெர்ஷனைப் பெறலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.2,500 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க: ஜனவரி 2025ல் ரூ.35,000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த மொபைல்களின் பட்டியல்…

கடைசியாக, குறைந்த பட்ஜெட்டில் ஆப்பிள் வாட்ச் வாங்க நினைப்பவர்கள், 40 மி.மீ. டயல் கொண்ட ஆப்பிள் வாட்ச் எஸ்இ 2 (ஜிபிஎஸ்) -ஐ பற்றி யோசிக்கலாம். ஏனெனில், இந்த மாடல் அமேசானில் ரூ.19,999க்கும் குறைவான விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது, அதன் அறிமுக விலையான ரூ.29,900லிருந்து ரூ.9,901 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Source link