மிகவும் மோசமான சூழ்நிலையில் அவசரமாக பணம் தேவைப்படும்போது விரைவான, அதே நேரத்தில் எளிமையான முறையில் பணம் கிடைப்பது என்பது நமக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும். குறைந்த தொகைக்கான எமர்ஜென்சி லோன் அல்லது இன்ஸ்டன்ட் லோன் என்பது நமக்கு உடனடியாக பணத்தை தரக்கூடிய ஒரு அற்புதமான ஆப்ஷன். ஏதோ ஒரு எதிர்பாராத செலவுக்காக உடனடியாக உங்களுக்கு 10,000 ரூபாய் தேவைப்படுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களுக்கு உதவக்கூடிய சில எமர்ஜென்சி லோன்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எமர்ஜென்சி லோன் என்பது ஒருவகையான பர்சனல் லோன். இது உங்களுக்கான அவசர மற்றும் எதிர்பாராத செலவுகளுக்கான பொருளாதார தீர்வாக அமைகிறது. வழக்கமான லோன்களைப் போல அல்லாமல் எமர்ஜென்சி லோன்கள் மிகக் குறைவான ஆவணங்கள் மற்றும் உங்களுக்கு விருப்பமான திருப்பிச் செலுத்தும் ஆப்ஷன்களுடன் கூடிய உடனடி பிராசஸ் கொண்ட லோன்கள். இந்த லோன்களைப் பெறுவதற்கு நீங்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது.
உடனடி எமர்ஜென்சி லோன் மூலம் கிடைக்கும் பலன்கள்
-
ஒரு சில நிமிடங்களிலேயே அப்ரூவ் செய்யப்படும் இந்த விண்ணப்ப செயல்முறைக்கு உங்களுக்கு ஒரு சில அத்தியாவசிய டாக்குமெண்ட்டுகள் இருந்தாலே போதுமானது.
-
உங்களுடைய பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில் பணத்தை நீங்கள் திருப்பிச் செலுத்தலாம்.
-
இன்ஸ்டன்ட் லோனை பெற வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
-
இதற்காக வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய தேவை கிடையாது.
ஆன்லைன் லோன் பிளாட்ஃபார்மை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
வழக்கமான லோன் அப்ளிகேஷன் முறைகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆன்லைன் லோன் பல நன்மைகளை கொண்டுள்ளது. இதனை நீங்கள் உங்களுடைய மொபைல் போனிலிருந்து உடனடியாக பெறலாம். இதனால் உங்களுடைய நேரம் மற்றும் ஆற்றல் ஆகிய இரண்டும் மிச்சமாகும்.
10,000 ரூபாய் இன்ஸ்டன்ட் லோனை ஆன்லைனில் பெறுவது எப்படி?
-
எமர்ஜென்சி லோனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு உங்களுக்கு சரியாக எவ்வளவு தொகை தேவை என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
-
ஒருவேளை உங்களுக்கு 10,000 ரூபாய் உடனடியாக தேவை என்றால் உங்களுடைய அவசர செலவை சமாளிப்பதற்கு இது போதுமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
10,000 ரூபாய் எமர்ஜென்சி லோனை பெறுவதற்கு நீங்கள் பின்வரும் தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்:-
-
வயது: 21 முதல் 60 வருடங்கள் வரை
-
நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
-
உங்களிடம் PAN கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும்.
-
கடந்த 6 மாதங்களுக்காவது தொடர்ச்சியாக உங்களுக்கு வருமானம் இருந்திருக்க வேண்டும்.
-
750க்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது அவசியம்
-
அடுத்தபடியாக அடையாள சான்றிதழாக PAN கார்டு, ஆதார் கார்டு, வருமான சான்றிதழாக சேலரி ஸ்லிப், பேங்க் ஸ்டேட்மெண்ட்கள் மற்றும் முகவரி சான்றிதழாக யூடிலிட்டி பில்கள், வாடகை வீட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
-
அடுத்தபடியாக ஆன்லைனில் லோன் வாங்குவதற்கான சரியான ஒரு பிளாட்ஃபார்மை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
-
நம்பகமான பிளாட்ஃபார்மில் மட்டுமே இன்ஸ்டன்ட் லோனுக்கு விண்ணப்பிப்பது அவசியம்.
-
இதன்பிறகு உங்களுடைய விவரங்களை நிரப்பி KYC செயல்முறையை நிறைவு செய்து, உங்களால் செலுத்த இயலக்கூடிய EMI தொகையை அமைத்துக் கொண்டு லோன் செயல்முறையை நீங்கள் தொடரலாம்.
-
இது 100 சதவீதம் டிஜிட்டல் செயல்முறை. இதற்கான வட்டி விகிதம் ஒரு வருடத்திற்கு 12 சதவீதம் ஆகும்.
இதையும் படிக்க:
இந்த வருடம் முடியப் போகுது… உங்களுடைய பொருளாதார முடிவை எடுப்பதற்கான கடைசி சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க!!!
10,000 ரூபாய் வரையிலான எமர்ஜென்சி லோன் பெறுவதற்கான காரணங்கள்
-
மருத்துவச் செலவுகள் அல்லது வீட்டை புதுப்பிப்பது போன்ற காரணங்களுக்காக நீங்கள் எமர்ஜென்சி லோன் பெறலாம்.
-
அடுத்தபடியாக நீங்கள் ஆங்காங்கே வாங்கி வைத்திருக்கும் கடன்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்காக இந்த 10,000 ரூபாய் இன்ஸ்டன்ட் பர்சனல் லோன் வாங்கலாம்.
-
படிப்பு செலவிற்காக அவசரமாக தேவைப்படும் பணத்திற்கு இந்த கடனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
உங்களுக்கு எங்கேயாவது வெக்கேஷன் செல்வதற்கான ஆசை இருந்தாலோ அல்லது கார் வாங்குவது போன்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உடனடியாக 10,000 ரூபாய் பணத்தை இதன் மூலமாக புரட்டிக் கொள்ளலாம்.
-
வாகனத்தை ரிப்பேர் செய்வதற்கு இந்த லோன் வழங்கப்படும்.
இதையும் படிக்க:
அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் இந்திய ஐஸ்கிரீம் பிராண்ட் எது தெரியுமா?
எமர்ஜென்சி லோனை நிர்வகிப்பதற்கான குறிப்புகள்
-
அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவதை தவிர்க்கவும்
-
பணத்தை சரியான நேரத்தில் திருப்பி செலுத்துவதற்கு உங்களால் முடிந்த EMI தொகையை மட்டுமே தேர்வு செய்யவும்
-
நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது அவசியம்
இந்த லோன் வசதியை உண்மையாகவே அவசரகால சூழ்நிலைகள் மற்றும் எதிர்பாராத செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.
.