பிரபல சீன ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் தனது OnePlus 13 மொபைலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த நிலையில் நிறுவனத்தின் முந்தைய மாடலான OnePlus 12 மொபைல் இப்போது இந்தியாவில் 10,000 ரூபாய் வரை பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

OnePlus 12 மொபைலின் விலை ரூ.3,000 வரை குறைக்கப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த மொபைலின் தொடக்க விலை ரூ.61,999-ஆக குறைந்துள்ளது. மறுபுறம் இந்த மொபைலின் ஹை-என்ட் மாடலின் விலை ரூ.69,999-க்கு பதிலாக ரூ.66,999ஆக தற்போது குறைந்துள்ளது. ரூ.3,000 விலை குறைப்பிற்கு கூடுதலாக மற்றொரு தள்ளுபடியாக ரூ.7,000 பேங்க் ஆஃபர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த மொபைலின் தொடக்க விலை ரூ.61,999-க்கு பதிலாக, நீங்கள் ரூ.54,999-க்கு வாங்கிக் கொள்ளலாம்.

விளம்பரம்

யாருக்கு ஆஃபர்?

Onecard, Federal Bank கார்ட் மற்றும் RBL கிரெடிட் கார்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி அமேசானில் OnePlus 12 மொபைலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.7,000 தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் OnePlus 12 மொபைலின் 12GB/256GB வேரியன்ட்டை ரூ.54,999-க்கும், 16GB/512GB வேரியன்ட்டை ரூ.59,999-க்கும் வாங்கலாம்.

OnePlus 12 மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் மொபைலை சலுகை விலையில் வாங்க விரும்பும் நபர்களுக்கு, OnePlus 12 நிச்சயமாக ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த மொபைல் 6.82-இன்ச் 2K Pro-XDR BOE X1 OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ப்ராசஸரை கொண்டிருக்கும் இந்த மொபைல் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா சிஸ்டமை கொண்டுள்ளது. இதில் OIS உடன் கூடிய 50MP Sony LYT-808 பிரைமரி கேமரா, 48MP Sony IMX581 அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 3x டெலிஃபோட்டோ ஜூம் கொண்ட 64MP OV64B பெரிஸ்கோப் லென்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இண்டிகோ பயணிகளுக்கு செமத்தியான ஆஃபர்… இலவச Spotify மெம்பர்ஷிப்!!!

மேலும் OnePlus 12 5G மொபைலானது செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 32MP Sony IMX615 செல்ஃபி கேமரா சென்சாரைக் கொண்டுள்ளது. OnePlus 12 மொபைலானது 100W சார்ஜிங் மற்றும் 50W AIRVOOC வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்தியாவில் அடுத்த தலைமுறை மொபைலை (OnePlus 13) விரைவில் அறிமுகப்படுத்த ஒன்பிளஸ் நிறுவனம் தயாராகி வருவதால் அதை வாங்க காத்திருக்கலாமா அல்லது சலுகை விலையில் கிடைக்கும் OnePlus 12-ஐ வாங்கலாமா என்று நீங்கள் யோசிக்கலாம். வரவிருக்கும் மாடல் மேம்படுத்தப்பட்ட ப்ராசஸர், பெரிய பேட்டரி திறன் மற்றும் IP68 + IP69 ரேட்டிங்ஸ் போன்ற பல அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

.



Source link