ரெயின்மேட்டர் அறக்கட்டளை மூலம் நிகில் காமத் ரூ.120 கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியிருக்கிறார். இது சமூக காரணங்களுக்காக, குறிப்பாக சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றில் அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

ஜெரோதாவின் (Zerodha) இணை நிறுவனரான நிகில் காமத் (38 வயது), சமூக அக்கறையில் தனது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக பிரபலமடைந்துள்ளார். மேலும் 2024 ஈடில்கிவ்-ஹூரன் இந்தியா தொண்டு பட்டியலில் இந்தியாவின் இளைய நன்கொடையாளர்களில் ஒருவராகவும் இடம்பிடித்துள்ளார்.

ரெயின்மேட்டர் அறக்கட்டளை மூலம் நிகில் காமத் ரூ.120 கோடி என்கிற அளவில் நிதியுதவிகளை வழங்கியுள்ளார். இது சமூக காரணங்களுக்காக, குறிப்பாக சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றில் அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இதன்மூலம், ஏசியன் பெயின்ட்ஸைச் சேர்ந்த விவேக் வக்கீல் (35 வயது) மற்றும் வில்லூ பூனாவல்லா அறக்கட்டளையைச் சேர்ந்த அதார் பூனாவல்லா (43 வயது) போன்ற பிற இளம் செல்வந்தர்களுடன் நிகில் காமத்தும் தற்போது இணைந்துள்ளார். இதில், 142 கோடி நன்கொடை அளித்து அதிக நன்கொடை வழங்கிய பங்களிப்பாளராக அதார் பூனாவல்லா முதலிடத்தில் உள்ளார்.

விளம்பரம்

நிகில் காமத் மற்றும் அவரது மூத்த சகோதரர் நிதின் காமத் (45 வயது) ஆகியோரும் பட்டியலில் முக்கிய இடம்பிடித்துள்ளனர். 100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கியவர்களில் இவர்களது பங்களிப்புக்கு 15வது இடம் கிடைத்துள்ளது. ஈடில்கிவ்-ஹூரன் இந்தியா தொண்டு பட்டியல் 2024, இந்தியாவின் பணக்கார செல்வந்தர்களின் பன்முகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நாடார்கள் மற்றும் அம்பானிகள் போன்ற செல்வாக்கு மிக்க குடும்பங்களின் முக்கிய நபர்களை உள்ளடக்கியது.

இந்த பட்டியல் பல்வேறு நிறுவனங்கள் மூலம் கணிசமான நன்கொடைகளை வழங்கிய பிற வளர்ந்து வரும் இளம் செல்வந்தர்களை எடுத்துக்காட்டுகிறது. அதன்படி, ஏசியன் பெயின்ட்ஸ் மூலம் வழங்கப்பட்ட ரூ.8 கோடியுடன் 35 வயதான விவேக் வக்கீல் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஜேகே சிமென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த மாதவ்கிருஷ்ண சிங்கானியா (36 வயது) ரூ.8 கோடியும், அல்கேம் ஆய்வகத்தைச் சேர்ந்த சரந்தர் சிங் (38 வயது) ரூ.7 கோடி நன்கொடையும் அளித்துள்ளனர். இதில் ரெயின்மேட்டர் அறக்கட்டளை மூலம் நிகில் காமத் தனது ரூ.120 கோடி பங்களிப்பிற்காக தனித்து நிற்கிறார். மேலும் இது இளைய வயதினரிடையே அவரை முதலிடத்திற்கு தள்ளியது.

விளம்பரம்

இதையும் படிக்க:
வெளிநாட்டு வேலையை விட்டு ரூ. 3.5 லட்சத்தில் தொழில் தொடங்கி இன்று ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர்..

இது தவிர, மற்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்களில் வருண் அமர் வக்கீல் (40 வயது) மற்றும் ராகவ்பத் சிங்கானியா (40 வயது) ஆகிய இருவரும் தங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் சுமார் 7 முதல் 8 கோடி ரூபாய் வரை நன்கொடை அளித்துள்ளனர்.

இளைய தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்கள் நன்கொடை வழங்கி வரும் போக்கு வளர்ந்து வருவதை இந்தப் பட்டியல் சுட்டிக்காட்டுகிறது. சமூக மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக இவர்கள் வழங்கும் நன்கொடை கணிசமான ஏற்றத்தைப் பெற்றுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
UPI சேவை கிடைக்காது.. HDFC வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இங்கு இளைய தலைவர்கள், தங்கள் நிறுவன சாதனைகளுக்கு அப்பால் நாட்டின் மீது குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகின்றனர். நிலையான வளர்ச்சி மற்றும் சமூக நலனில் கவனம் செலுத்தும் எதிர்காலத்தை வடிவமைக்க இவர்கள் உதவுகிறார்கள்.

.



Source link