சுமார் 500 கி.கி. ஐஸ் போதைப்பொருளைக் கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப்படகுடன் 9 இலங்கையர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன் தெருமதிப்பு ரூ. 170 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மீன்பிடி படகுகள் மூலமான போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இலங்கை கடற்படையினரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய கடற்படையினர் முன்னெடுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நவம்பர் 24 மற்றும் 25 நவம்பர் 24 ஆகிய திகதிகளில் இந்திய கடற்படை நீண்ட தூர கடல் ரோந்து விமானம் மற்றும் தொலைதூர பைலட் விமானங்கள் மூலம் விரிவான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, இந்திய கடற்படைக் கப்பலின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதன்போது இரண்டு படகுகள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அதிலிருந்து 500 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அதிலிருந்த 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த இரண்டு படகுகள், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை கப்பலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இரு நாடுகளுக்கும் கடற்படைகளுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பின் நன்மைகளுக்கு ஒரு சான்றாக உள்ளதாக, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
The post ரூ. 170 பில்லியன் மதிப்புடைய 500 கி.கி. ஐஸ்; கைதான இலங்கையர் appeared first on Thinakaran.