News18

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் ஃபோனாக OnePlus 13 இருந்தாலும், OnePlus 13R நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் கில்லர் டிவைஸாக உள்ளது. பிரீமியம் ஃபிளாக்ஷிப் டிவைஸ்களைப் போல அதிக விலையை கொண்டிருக்காமல் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. ரூ.42,999ல் தொடக்க விலையில் கிடைக்கும் OnePlus13R பணத்திற்கு சிறந்த மதிப்பை யூஸர்களுக்கு ஏற்கனவே வழங்குகிறது. ஆனால், ரூ.25,000க்கும் குறைவான விலையில் இந்த மொபைல் தற்போது கிடைக்கிறது.

ரூ.25,000க்கு கீழ் கிடைக்கும் OnePlus 13R… சிறப்பு விலையில் எப்படி வாங்குவது?

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் அமேசான் இரண்டிலும் இந்த மொபைலின் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.42,999 மற்றும் 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.49,999ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமேசானில் இருந்து வாங்கும்போது ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு யூஸர்கள் (அமேசான் பே கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தவிர) இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்டாக ரூ.3,000 தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் மேற்கண்ட இரண்டு வேரியன்ட்ஸ்களின் விலைகள் முறையே ரூ.39,999 மற்றும் ரூ.46,999ஆக குறையும்.

ஒருவேளை ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் நீங்கள் வாங்க விரும்பினால், ஒன்கார்டு கிரெடிட் கார்டு மூலம் இந்த ரூ.3,000 தள்ளுபடியைப் பெறலாம். கூடுதலாக அமேசான் உங்கள் பழைய ஸ்மார்ட் ஃபோனின் நிலை மற்றும் மதிப்பைப் பொறுத்து ரூ.36,500 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரை வழங்குகிறது. உதாரணமாக 2 ஆண்டுகள் பழமையான OnePlus 11R-ஐ எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.16,300 வரை ஆஃபர் கிடைக்கும், இதன் மூலம் இந்த மொபைலின் பேஸ் வேரியன்ட்டின் விலை ரூ.23,699ஆக குறையும். அதே நேரம் 16GB ரேம் வேரியன்ட்டின் விலை எக்ஸ்சேஞ்சிற்குப் பிறகு ரூ.30,699ஆக இருக்கும்.

இறுதி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மதிப்பு உங்கள் பழைய மொபைலின் நிலை மற்றும் சந்தை மதிப்பைப் பொறுத்தது. அமேசானுக்கு சென்று, உங்களுக்குத் தேவையான OnePlus 13R வேரியன்ட்டை தேர்ந்தெடுத்து, நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்ய விரும்பும் உங்களிடம் இருக்கும் மொபைலின் விவரங்களை என்டர் செய்யவும். உங்கள் டிவைஸானது அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் மதிப்புக்கு தகுதி பெற்றால், நீங்கள் சிறந்த டீலை பெறுவீர்கள்.

இதையும் படிக்க: ஜனவரி 2025ல் ரூ.35,000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த மொபைல்களின் பட்டியல்…

OnePlus 13R மொபைலின் அம்சங்கள்:

இதன் ஃபிளாட் 6.78-இன்ச் டிஸ்ப்ளே oneplus 12R-ஐ விட குறிப்பிடத்தக்க அப்கிரேட் ஆகும். இது கர்வ்ட் பேனல்களுடன் மிகவும் சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது. மேலும், இதில் இருக்கும் Glove Mode யூஸர்கள் க்ளவுஸ் அணிந்திருந்தால் கூட அதனை அகற்றாமல் ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்த அனுமதிக்கிறது. செயல்திறனைப் பொறுத்தவரை, OnePlus 13R யூஸர்களின் அன்றாட பயன்பாட்டிற்கும், கேமிங் போன்ற அதிக சவாலான பணிகளுக்கும் தேவையான சக்தியை வழங்குகிறது.

இதையும் படிக்க: 2025ல் ஐந்து ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஆப்பிள்…!

Snapdragon 8 Gen 3 ப்ராசஸர் இதில் உள்ளது. மேலும் இதில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் சுமார் 50 நிமிடங்களில் இந்த மொபைலை சார்ஜ் செய்யலாம். AI டூல்ஸ்களால் நிரம்பிய சமீபத்திய OxygenOS 15 உடன் வரும் இந்த மொபைல் செயல்திறன், நீடித்து உழைக்கும் தன்மையை யூஸர்களுக்கு அளிக்கிறது.



Source link