நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மொபைல் ப்ரீபெய்ட் யூஸர்களுக்கு சில அற்புதமான பிளான்களை வழங்குகிறது. மேலும் இந்த பிளான்களுள் சில பட்ஜெட்டுக்கு ஏற்றவையாகவும் உள்ளன.
நீங்கள் ஜியோ மொபைல் சிம் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் ரூ.300-க்குக் குறைவான விலையில் தினசரி 1.5GB டேட்டா லிமிட் வழங்கும் ப்ரீபெய்ட் பிளான்களை ரீசார்ஜ் செய்ய விரும்புகிறீர்களா.!! அப்படி என்றால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில பிளான்கள் உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.300-க்கும் குறைவான விலையில், தினசரி 1.5 GB டேட்டா லிமிட்டை வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம்.
தினசரி 1.5 ஜிபி டேட்டா லிமிட் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் பிளான்கள் இங்கே:
ஜியோவின் ரூ.199 பிளான்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் யூஸர்களுக்கு வழங்கும் ரூ.199 பிளான் 18 நாட்கள் சர்விஸ் வேலிடிட்டி மற்றும் யூஸர்களுக்கு தினமும் 1.5GB டேட்டாவை வழங்குகிறது. இந்த பிளான் வழங்கும் மற்ற அம்சங்களில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இந்த பிளான் வழங்கும் கூடுதல் அம்சங்களில் ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட். ஆகியவற்றுக்கான இலவச அக்சஸ் அடங்கும். யூஸர்கள் தினசரி டேட்டா லிமிட்டை கடந்த பின் இன்டர்நெட்டின் ஸ்பீட் 64 Kbps ஆக குறைக்கப்படும்.
ஜியோவின் ரூ.239 திட்டம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.239 பிளான் மொத்தம் 22 நாட்கள் சர்விஸ் வேலிடிட்டி கொண்டது மற்றும் இந்த பிளானை ரீசார்ஜ் செய்யும் யூஸர்கள் தினமும் 1.5GB டேட்டா லிமிட்டை பெறுகிறார்கள். இந்த பிலனோடு வழங்கப்படும் மற்ற அம்சங்களில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இந்த பிளானோடு கிடைக்கும் கூடுதல் அம்சங்களில் ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் உள்ளிட்டவற்றுக்கான இலவச அக்சஸ் அடக்கம். யூஸர்கள் தங்களின் தினசரி டேட்டாவை கடந்த பிறகு நெட் ஸ்பீடை ஜியோ நிறுவனம் 64Kbps ஆக குறைக்கிறது.
ஜியோவின் ரூ.299 பிளான்:
ஜியோ நிறுவனம் வழங்கும் இந்த ரூ.299 ப்ரீபெய்ட் பிளான் மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த பிளானை ரீசார்ஜ் செய்யும் யூஸர்கள் 28 நாட்களுக்கு அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 1.5GB டேட்டாவை பெறுகிறார்கள். இந்த பிளானோடு வழங்கப்படும் பிற நன்மைகளில் ஜியோடிவி, ஜியோகிளவுட் மற்றும் ஜியோசினிமா உள்ளிட்டவற்றுக்கான இலவச அக்சஸ் ஆகியவை அடங்கும்.
.